என் -னின் , இஃது உரிமை க்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. ஐயம் அறுத்ததூஉமாம். முதலுஞ் சினையுமென்று சொல்லப்பட்ட இருவகைப் பொருட்குங் கருதிய மரபினான் அவற்றிகேற்பவை உரியவாம் என்றவாறு . சொல்லதிகாரத்துட் , " செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக் கப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே" என்றார் . அவ்வாறன்றியுவமைக்கு நியமமில்லை என்ற வாறாயிற்று . " ஒருகுழை யவன்போல் இணர்சேர்ந்த மரா அமும் " (கலித் . 26 ) என்பது முதற்கு முதல் உவமமாயிற்று ." அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழல் தோன்றுநின் செம்மலைக் காணூஉ." (கலித் . 84) என்பது முதற்குச் சினை உவமமாயிற்று" தாமரை புரையுங் காமர் சேவடி" (குறுந் கடவுள் வாழ்த்து ) என்பது சினைக்குச் சினை யுவமமாயிற்று. " நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி." (அகம் . 84 ) என்பது சினைக்கு முதல் உவமமாயிற்று.(6)
1. இதன் கருத்து , முதலொடு முதலும் , சினையொடு சினையும் , முதலொடு சினையும் , சினையொடு முதலும் வேண்டியவாற்றான் உவமஞ் செய்தற்கு உரிய எனவும் அங்ஙனம் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படும் எனவும் கூறியவாறு . ( தொல் . பொருள் . 281 . பேரா . )
|