என்-னின் .இதுவுமோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. சுட்டிக் கூறா வுவமை என்பது- உவமிக்கப்படும் பொருட்கு உவமை இதுவெனச் சுட்டிக்கூறாமை. ஆவ்வாறு வருமாயின் உவமச் சொல்லொடு பொருந்த உவமிக்கப்படும் பொருளொடு புணர்த்து உவமவாய்ப்பாடு கொள்க என்றவாறு. இதனாற் சொல்லியது உவமவாய்ப்பாடு தோன்றா உவமம் பொருட்குப் புணராக்கண்ணும் உவமை உள என்றவாறாம். "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து." (குறள்.90) இதன்கண் 'அதுபோல' எனச் சுட்டிக்கூறா வுவமையாயினுனவாறு கண்டுகொள்க.(7)
1.'பவளவாய் ' என்கின்ற வழிச் சுட்டிக்கூறா உவமம் . 'பவளம் போற் செந்துவர்வாய்' என்பது சுட்டிக்கூறிய உவமம் . என்னை? இரண்டிற்கும் பொதுவாகிய செம்மைக்குணத்தினைச் சொல்லியே உவமம் சொல்லினமையின்.(தொ.பொருள்.282.பேரா.) 2.(பாடம்) புணர்ந்தன.
|