என்-னின்.இஃது உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இரட்டைக் கிளவியாயினும் , நிரனிறுத்தமைத்த நிரனிறைச்சுண்ணமாய் வரினும், மிக்குங்குறைந்தும் வருதலன்றி யுவமை யடையடுத்து வரினும். தொழிற்பட்டு வரினும் ,ஒன்றும் பலவுமாகி வரினும் வருமொழியும் அவ்வாறே வருதல் வேண்டும் என்றவாறு. அவ்வழி வாராது மிக்குங்குறைந்தும் வருவது குற்றம் என்றவாறாம்.
1.உவமையும் 2.உவமானமும் பொருளும் தம்மின் ஒத்தன என்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும் (தொல்,பொருள்.283.பேரா.) (ஒத்ததறிதலாவது உலக நடையினை அறிந்து செய்தல்.)
|