உவமையியல்

2981தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது 

என்-னின். இது தோழியுவமை கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

தோழி உவமைசொல்லின் அந்நிலத்தினுள்ளனவன்றிப் பிறநிலத்துள்ளன கூறப் பெறாள் என்றவாறு.

உரையாது உவமம் என ஒருசொல் வருவிக்க. உதாரணம் தோழி கூற்றுட்காண்க.

(27)


1.297, 298 இரண்டு சூத்திரங்களையும் ஒரு சூத்திரமாக்குவர் பேராசிரியர்.