என் - னின், தோழியுஞ் செவிலியும் உவமை கூறுங்காற் பொருந்துமிடம் பார்த்துக் கூறுதற்குரியர் கேட்டார் கொள்ளுநெறியான் என்றவாறு. பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக் கிருள்வளை வுண்ட மருள்படு பூம்பொழில் ". எனவரும். பிறவுமன்ன மேற்காட்டினவற்றுள் கண்டுகொள்க.(33) 1.காலமும் இடனும் பொருந்துதல் என்பது வெளிப்படக்கிளவாது முன்னத்தான் மறைத்துச் சொல்ல வேண்டியவழி அவ்வாறு சொல்லப் பெறுப அவரும் என்றவாறு. இங்ஙனம் கூறவே, ' ஏனோர்க் கெல்லாம் இடம் வரைவின்று. " (300) என்றவழி, எல்லாரும் உள்ளுறையுவமம் சொல்லப் பெறுவர் என்பது பட்டது. ( தொல். பொருள். 306. பேரா.)
|