உவமையியல்

305வேறுபட1 வந்த உவமைத் தோற்றம்
கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல்.

என் - னின்.மேலனவற்றிற் கெல்லாம் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

ஈண்டு எடுத்தோதப்பட்ட இலக்கணத்தின் வேறுபட்டுவந்த உவமைத்தோற்றம் எடுத்தோதிய நெறியிற் கொள்ளும்வழிக் கொளுவுக என்றவாறு.

பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்

கிருள்வளை வுண்ட மருள்படு பூம்பொழில்.


எனவரும் பிறவுமன்ன.

(34)


1.வேறுபட வருதல் என்பது; உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதலும், ஒப்புமை கூறாது பெயர்போல்வனவற்று மாத்திரையானே மறுத்துக் கூறுதலும் ................... உவமானத்தினை உவமேயம் ஆக்கியும் அது விலக்கியும் கூறுதலும்..... இன்னோரன்ன எல்லாம் ' வேறுபடவந்த உவமத் தோற்றம் ' எனப்படும். கொளாஅல்- கொளுவுதல் இவற்றைக் ' கூறிய மருங்கிற் கொளுத்துதல் ' என்பது; முற்கூறிய ஏனை உவமத்தின்பாலும் பிற்கூறிய உள்ளுறை யுவமத்தின்பாலும் படுத்து உணரப்படும் என்பது. (தொல். பொருள். 307. பேரா.)