என் - னின். இதுவும் உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. உவமைக்கண் தடுமாறு வருதல் நீக்கப்படாது என்றவாறு. தடுமாறுத லாவது - ஐயமுறுதல். எனவே ஐயநிலையுவமமுங் கண்டு கொள்க. "கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து." (குறள். 1085) என்றும்,"ஈங்கே வருவாள் இவள்யார்கொலாங்கேயோர் வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார் உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல்வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொல். (கலித் . 56) என்றும் வரும் பிறவும் அன்ன(37)
1.(பாடம்) தடுமாறுவமம்.
|