என் - னின் உவமைபல வந்தவழி வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. அடுக்கிய தோற்றமாவது - உவமைபல அடுக்கித் தோற்றுதல். நிரனிறுத்தமைத்த லாவது - ஒரு பொருளொடு தோற்று தொடரையுடைத்தாகப் பலவுவமை வருதல். நிரனிறை யாவது - உவமைபலவற்றையுஞ் சேர நிறுத்தியுவமிக்கப்படும் பொருளையுஞ் சேரநிறுத்தல். சுண்ணமென்பது - உவமையையும் பொருளையுந் துணித்து ஒட்டுதல். வரன்முறை வந்த மூன்றலங் கடையே என்பது - அடுக்கியலுவமை கடியப்படும். ஆமென்று வரையப்பட்ட நிரனிறுத்தன் முதலிய மூன்றும் அல்லாதவழி என்றவாறு. அவற்றுள், கடியப்பட்டது உவமைக் குவமையாக அடுக்கிவருவது. "வெண்திங்கள் போன்றுளது வெண்சங்கம் வெண்சங்கின் வண்டிங்கு தாழை வளர்கோடு." என்றவழி அவ்வாறு உவமைக்குவமையாகக் கூறியவதனாற் போதுவதோர் பயன் இன்மையின் ஆகாதென்றுகொள்க.நிரனிறுத்தமைத்தல் வருமாறு:- "நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரி யையே." (பதிற்றுப். 14) "மதிபோலுந் தாமரை போலும். " என வரும்.நிரனிறை வருமாறு ; - "கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள்." (யாப். வி. பக். 359) எனவரும், சுண்ணமாவது;- "களிறும் கந்தும் போல நளிகடற் கூம்பும் கலனுந் தோன்றும் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே." (அகத்திணை. 11. நச்.) என்றவழி நிரனிறையன்றிக் களிறுபோலுங் கலன் எனத் துணிக்க வேண்டியவாறு கண்டுகொள்க. ஏழாவது உவமையியல் முற்றிற்று(38)
1. இதனை 311, 312 என இரண்டாக்குவர் பேராசிரியர். 2.இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுள் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளியலுள்ளும் சொல்லுகின்ற சிலபொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியாம் என இக்காலத்தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணி என்று இலக்கணங் கூறப்படா. என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வரும், தாங்காட்டிய இலக்கணத்தில் சிதையாவழியும் என்பது.......... ஆனந்த உவமை என்பன சிலகுற்றம் அகத்தியனார் செய்தார் எனக் கூறுப ஆகலின் ( எனக் கூறுப ஆகலின்) அவையிற்றை எவ்வாறு கோடும் எனின் அவைகள் தாம் அகத்துள்ளும் பிறசான்றோர் செய்யுளுள்ளும் வருதலின் குற்றமாகா; அகத்தியனாரால் செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்த ஒத்து என்பது ஒன்று செய்தாராயின் அகத்தியமும் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யும் குற்றம் வேறுபடா என்பது. (தொல். பொருள். 311. பேரா.) 3.வரைநிலை வைத்த.
|