என் - னின். மேற்சொல்லப்பட்டவற்றுள் மாத்திரை வகையு மெழுத்தியல் வகையு மேல் எழுத்ததிகாரத்துச் சொல்லப்பட்டன வென்று சொல்லுவர் புலவரென்றவாறு. ஈண்டு வேறுபாடில்லை யென்றவாறு அவையாவன குற்றெழுத் தொருமாத்திரை; நெட்டெழுத்து இரண்டு மாத்திரை; உயிரளபெடை மூன்று மாத்திரை; குற்றிய லிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தமு மெய்யும் ஒரோவொன்று அரைமாத்திரை; ஒற்றளபெடை ஒரு மாத்திரை ஐகாரக் குறுக்கம் ஒருமாத்திரை; மகரக்குறுக்கங் கால்மாத்திரை; ஏறிய உயிரினளவே உயிர்மெய்க்களவு. எழுத்தியலாவது - உயிரெழுத்து. மெய்யெழுத்து, சார்பெழுத்தென மூவகைப்படும். உயிரெழுத்து குற்றெழுத்து, நெட்டெழுத்து அளபெடையென மூவகைப்படும். மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம் இடையின மென மூவகைப்படும். சார்பெழுத்து குற்றியலிகரம். குற்றியலுகரம், ஆய்தமென மூவகைப்படும். மெய்யினுட் சிலவும் ஆய்தமும் அளபெடுக்கப்பெறும். குற்றெழுத்து அ, இ, உ, எ, ஒ. நெட்டெழுத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள. அளபெடை ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ. வல்லினம் கசடதபற .மெல்லினம் ஙஞணநமன. இடையினம் யரலவழள. குற்றியலுகர மாவது நெட்டெழுத்தின் பின்னரும் மூன்றெழுத்து முன்னான மொழியினும் வல்லெழுத்தை ஊர்ந்து வந்து உகரம். நாகு நாக்கு: காசு - காச்சு; காடு - காட்டு; காது - காத்து; காபு - காப்பு; காறு - காற்று என இந்நிகரன. குற்றியலிகரமாவது இவ்வுகரந்திரிந்து மகர மூர்ந்து மகரமோடியைந்து வரும். நாகியாது உகரந்திரிந்தது; கேண்மியா மகர மூர்ந்தது. பிறவு மன்ன. ஆய்தமாவது குற்றெழுத்திற்கும் வல்லெழுத்திற்கும் இடைவரும் அஃதாவது எஃகு எனவரும். ஒற்றளபெடையாவது மெல்லினமும் வயலளவும் ஆய்தமும் அளபெடுக்கும். அவை மங்கலம், மஞ்ஞ்சு எனவரும். இனி உயிர்மெய்யுங் கூடி உயிர்மெய்யெழுத்தாம். அவை ககர முதல் னகரவீறாகிய இருநூற்றொருபத்தாரும், இன்னும் ஐகாரக்குறுக்கமும் மகரக்குறுக்கமும் என்பவுமுள. ஐகாரக்குறுக்கம் அளபெடையுந்தனியு மல்லாதவழிக் குறுகும்.மகரககுறுக்கம் ணகர, னகர ஒற்றின் பின்வரும்.புணர்மொழிக்கண் வகரத்தின் மேனின்ற மகரங் குறுகும். இவையெல்லாம் எழுத்ததி காரத்துட் காண்க. (2)
1. (பாடம்) அளவும். 2. உயிர்மெய்த்தொடக்கத்து ஐந்தனையும் மேல் எழுத்தென்றிலன் ஆகலான் ஈண்டு எழுத்தியல் வகையுள் எழுத்தாக்கி அடக்குமாறு என்னையெனின் ஈண்டு அன்னை எனவே, ஆண்டு இரண்டெழுத்தின் கூட்டம் எனவும் மொழி எனவும் போலி எனவும் கூறினான் ஆயினும், அவற்றை எழுத்தியல்வகை எனப் பெயர் கொடுப்பவே ஆண்டு நின்றவகையானே ஈண்டு எழுத்தெனப்படும் என்பதாயிற்று. (தொல். பொருள். 314. பேரா.) 3. (பாடம்)தன்ன.
|