என் - னின் நிறுத்தமுறையானே தொன்மைச் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருண்மேல் வருவன. அவை இராமசரிதமும் . பாண்டவ சரிதமும் முதலாகியவற்றின்மேல் வருஞ் செய்யுள். (225)
1.(பாடம்) தொன்மைதானே, உரையொடு புணர்ந்த பழமை மேற்றே.
|