செய்யுளியல்

544செய்யுள்1 மருங்கின் மெய்பெற நாடி
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வருவன2 உளவெனும் வந்தவற் றியலால்
திரிபின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே.

என் - னின். யாப்பிற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

(231)

1.அவை எண்சீர் முதலாயின வரின் கழிநெடிலடிப்பாற் சார்த்திக் கோடலும் ஏது நுதலிய முதுமொழியோடு பாட்டிற்கு இயைபின்றியும் தொடர்பு படுப்பனவும் யாப்பென்னும் உறுப்பின்பாற் கோடலும் பிறவும் ஈண்டு ஓதாதன உளவெனின் அவையுமெல்லாம் செய்யுளிலக்கணம் முடிபாகும் என்றவாறு. (தொல். பொருள்.555.பேரா.)

2.(பாடம்) வருவ உளவெனினும்.

எட்டாவது செய்யுளியல் முற்றிற்று