இவ்வோத்தினுள்3 இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் இளமைப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. குழவியொடு இவ்வொன்பதும் இளமைப் பெயராம் என்றவாறு ? இதன் பொருள் மேல் விரிக்கின்றார். (1)
1. மரபென்ற பொருண்மை என்னையெனின் , கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும்,செய்யுளியலுள் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமன்றி , இருதியணைப் பொருட் குணனாகிந இளைமையும் , ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும் , உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும் , அஃறிணைப் புள்ளும் மரனும் பற்றிய மரபும் , அவைபற்றி வரும் உலகியல் மரபும் , நூல்மரபும் என இவையெல்லாம் மரபெனப்படும் என்பது . ( தொல். பொருள். 556 . பேரா.) 2. (பாடம்) மறியுமொன்பதும். 3. என்பது சூத்திரம் . இவ்வோத்து என்னபெயர்த்தோ வெனின் , மரபியலென்னும் பெயர்த்து , உலகத்து வழங்கும் பொருளை யிவ்வாறு சொல் .... ற்பெற்றபெயர் . மேற்செய்யுளிலக்கண முணர்த்தி வழக்கிலக்கணம் உணர்த்துகின்றாராகலின் பிற்கூறப் பட்டது . இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் , இருதிணைப் பொருளும் பற்றி வரும் இளமைப் பெயர் உணர்த்துதல் நுதலிற்று . மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிடைய மரபியலைக் கூறுங்காலத் தென்றவாறு . விலக்குத லருமையாவது பார்ப்பென்பதனை வழங்கியன் மரபி .... றுங்காற் கூறலாகாமை . பார்ப்பு முதலாகக் குழவியீறாகச் சொல்லப்பட்ட வொன்பதும் இளமைப்பெயரென்றவாறு .... குழவியோடொன்பதுமென மொழி மாற்றுக. அவை யாமாறு தத்தஞ் சூத்திரத்துக் காட்டுதும்.
|