என்-னின் ஆண்பாற்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. ஆண்பாற் பெயர் இவ்வெண்ணப்பட்ட பதினைந்தும் பிறவுமாம் என்றவாறு. பிறவும் என்றதனான் ஆண் என்றும் விடை என்றும் வருவனபோல் வனகொள்க. (2)
1. (பாடம்) ஏறும். 2. ஏறுமுதலாகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மையபிறவும் ஆண்பாமற் பெயரென்றவாறு . பிறவுமென்றதனாற் கொள்ளப்படு ... ல் மக்கட்குரிய ஆண்பெயர் கூறாத தென்னையெனின் , அவை பாலறியவந்த வுயர்திணைப் பெயரெனச் சொல்லதிகாரத்துள் (பெயரியல்.2 ) எடுத் ... தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். 3. `யாத்த ஆண்பாற் பெயர்' என்றதனால் போத்து என்பது இளைமைப்பெயராமாயினும் இங்ஙனம் ஆண்பாற்குச் சிறந்து வருமாறுபோலச் சிறவாது அதற்கென்பது கொள்க. (தொல். பொருள். 557. பேரா.) ஆண்மை பெண்மை புல்லிற்கு இன்மையின் அவையும் முடிபுடையன ஆகாவாயினும் காயாப்பனையை ஆண்பனை என்றும் காய்ப்பனவற்றைப் பெண்பனை என்றும் வழங்குப . இவையெல்லாம் வழக்காகலின் செய்யுளுள் வருமாறு அறிந்து கொள்ளப்படும். (தொல். பொருள். 558. பேரா.)
|