சூ. 140 : | தாய்அறி வுறுதல் செவிலியொ டொக்கும் |
(48) |
க - து : | நற்றாய் தலைவி யொழுக்கத்தை அறியுமாறு கூறுகின்றது. |
பொருள் :தலைவியது களவொழுக்கத்தை நற்றாய் அறிந்துகொள்ளுதல் செவிலி அறிந்து கோடலொடு ஒக்கும். |
"தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே' என்றதனான் ஈண்டுச் செவிலியொடு ஒக்கும் என்றார். அங்ஙனம் மதியுடம்பட்டு உணராதவழிச் செவிலி அறத்தொடு நிற்றலான் உணரும் என்பது இதன் பயனாம். |
எ - டு : | "எனவாங்கு, அறத்தொடு நின்றேனைக் கண்டு திறம்பட |
| என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்" |
(கலி-39) |
என்பதனாற் கண்டு கொள்க. |
சூ. 141 : | அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின் |
| அங்கதன் முதல்வன் கிழவ னாகும் |
(49) |
க - து : | களவொழுக்கம் புறத்தார்க்குப் புலப்படுமாறும் அதற்குக் காரணம் ஆமாறும் கூறுகின்றது. |
பொருள் : அயலவர் நிகழ்த்தும் அம்பலும் தூற்றும் அலரும் தலைவியது களவொழுக்கத்தைப் பிறரறியப் புலப்படுத்தும். அவை அங்ஙனம் புலப்படுத்தலான் அதற்குக் காரணமாவான் தலைவனாவான். |
இரவுக்குறிக்கண்ணும் பகற்குறிக்கண்ணும் வந்து செல்வானைக் காண்டலான் களவு புலப்பாடாகும் என்க. |
எ - டு : | "நீர்ஒலித் தன்ன பேஎர் |
| அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே". |
(அகம்-211) |
என்பதனான் தலைவன் காரணமாதல் அறிக. |
சூ. 142 : | வெளிப்பட வரைதல் படாமை வரைதல்என்று |
| ஆயிரண் டென்ப வரைத லாறே |
(50) |
க - து : | களவின் முடிபாகிய வரைதல் பற்றியதொரு முறைமை கூறுகின்றது. |
பொருள் : களவொழுக்கம் புறத்தார்க்கும் வெளிப்பாடான பின்னர் வரைந்து கோடலும் வெளிப்படாததற்கு முன்னர் வரைந்து கோடலும் என வரைதல் பற்றிய முறைமை இருவகைப்படுமென்று கூறுவர் நூலோர். |