120கற்பியல்

பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும் 

நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும் 

சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியும் 

காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும் 

தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் 

உடன்சேறற் செய்கையொடு அன்னவை பிறவும் 

மடம்பட வந்த தோழிக் கண்ணும் 

வேற்றுநாட் டகல்வையின் விழுமத் தானும் 

மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் 

அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் 

பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும் 

காமக் கிழத்தி மனையோள் என்றிவர் 

ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் 

சென்ற தேஎத் துழைப்புநனி விளக்கி 

இன்றிச் சென்ற தன்னிலைக் கிளப்பினும் 

அருந்தொழில் முடித்த செம்மற் காலை 

விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் 

மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் 

கேளிர் ஒழுக்கத்துப் புணர்ச்சிக் கண்ணும் 

ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇப் 

பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும் 

எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன  

(5)
 
க - து :
 

கற்பொழுக்கத்தின்கண்   தலைமகனிடத்து    நிகழும் கூற்றுவகை
இவையென அவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது.
 

குறிப்பு : இருவகைக்   கைகோளினும்  தலைவன்      தலைவியர்க்கு
உரியவாக வகுத்தோதப்பெறும் கூற்றுக்கள் - கிளவிகள் யாவும் அகத்திணை
யுள்ளும்    புறத்திணை    யுள்ளும்     மரபியலுள்ளும்    உலகியலான்
கூறப்பெற்றமைந்த அந்தணர்   முதலிய    நாற்பாலார்க்கும்,   வேந்தனாற்
சிறப்புநிலை எய்தியோர்க்கும் ஏனை  வினைவலபாங்கினோர்க்கும் அவரவர்
நிலைக்குரியவாகப்    பாடல்     சான்ற    புலனெறி     வழக்குப்பற்றித்
தொகுத்துரைக்கப் பட்டனவாகும். இவை  யாவும்   ஒவ்வொருவர் மாட்டும்
நிகழும் எனக் கொள்ளற்க - யாவும் இம்முறையானே நிகழும் எனக்கருதற்க.
அவரவர் நிலைமைக்கேற்பச் சில நிகழும்; சில நிகழா.   சில பொதுவாகவும்
சில சிறப்பாகவும் நிகழும் யாவும் இலக்கண நோக்கில்   அமைந்தனவாகும்
என அறிந்து கொள்க.