122கற்பியல்

'உரிமை' என்றும் அவை தலைவியினின்றும்   தன்னைப் பிரிப்பனவாதலின்
'அஞ்சவந்த' என்றும் கூறினார். எ - டு : வந்துழிக் கண்டுகொள்க.
 

இதற்கு அஞ்சும்படியாகத்  தலைவி  மாட்டுளதாகிய கற்புரிமை என்பார்
சிலர். கற்பு குலமகளிர்க்குரிய   இயற்கைக்  குணமாகலானும்   அதுபற்றிய
செயல்கள்   உவத்தற்குரியனவன்றி   அஞ்சத்தக்கன    அல்லவாகலானும்
அவர்கருத்து ஒவ்வாமையறிக.
 

4) நன்னெறிப்படரும்        தொன்னலந்    பொருளினும்  என்பது :
நன்னெறிக்கண் செலுத்தும்   தொன்மை நலஞ்சான்ற    பொருண்மையைக்
கருதுமிடத்தும் என்றவாறு.
 

என்றது : கல்வியிற்பிரிவைக்    கருதுதற்    கண்ணும்     என்றவாறு.
பொதுப்படக்கூறியவதனான்  பகைதணி வினையாகிய தூது பற்றிய பிரிவைக்
கருதுதலும் கொள்க. எ - டு : வந்துழிக் கண்டு கொள்க.
 

5) பெற்ற  தேஎத்துப்   பெருமையின்   நிலைஇக்   குற்றஞ்    சான்ற
பொருளெடுத்துரைப்பினும் என்பது : தலைவியையே  மனைக் கிழத்தியாகப்
பெற்ற விடத்து அவளை அப்பெருமைக்கண் நிறுத்திக் களவின்கண் குற்றஞ் சான்றவையாக நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்குமிடத்தும் என்றவாறு.
 

'குற்றஞ்  சான்ற பொருள்'   என்றது     ஆற்றதுதீமை      யஞ்சாது
ஒழுகியமையும்   இடையீடுபட்டு   வருந்தியமையும்   உடன்போக்கின்கண்
நிகழ்ந்தவையும் அவை போல்வன பிறவுமாம்.
 

எ - டு :வந்துழிக் கண்டு கொள்க.

 

6) நாமக்காலத்து         உண்டெனத்    தோழி   ஏமுறு    கடவுள்
ஏத்தியமருங்கினும் என்பது ;    களவின்கண்   தலைவன்   வருந்தொழிற்
கருமை       கருதிய   காலத்தும்;    ஆற்றூறு   அஞ்சிய   காலத்தும்
ஆற்றியிருந்தமைக்குக் காரணமாகியதொரு கடவுள்   உண்டு   எனக்கூறித்
தோழி அத்     தெய்வத்தை     ஏத்தியவிடத்துத  தலைவன்   வதுவை
நிகழுந்துணையும் அங்ஙனம்   காத்து    மனையற    வாழ்வை   நல்கிய
அத்தெய்வம் இனியும்   காத்தளிக்கும்    எனத்தானும  ஏத்துதற்கண்ணும்
என்றவாறு.
 

எ - டு :வந்துழிக் கண்டு கொள்க.

 

7) அல்லல்  தீர  ஆர்வமொடளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும்
என்பது : களவுக் காலத்துத்     தலைவி    தானுற்ற துயரெல்லாம் நீங்கப்
பெருகிய அன்பொடு அளாவித் தலைவி   சொல்லும் பொருண்மையிடத்தும்
என்றவாறு.