கலக்கமாவது : இத்தகைய கற்பும் பொறையும் அன்புமுடையாள் இன்புறுதற்கியலாமல் முதிர்ந்தமை எண்ணியும், இத்தகைய நன்கலனாகிய புதல்வனை ஈன்றளித்தாளைப் பிரியாது உடனுறைதற்கு இடையூறாக அமைந்துள்ள கடமைகளை எண்ணியும் கலங்குதல். அவற்றை விலக்கற்குத் தன்னால் இயலாமை நோக்கிச் செயலறவுறுதலின் "இறந்த துணைய" என்றார். |
அவை வழிவழி வரும் குலமரபும், கடமையும் பற்றி அமைதலான் கலங்காமைக்கும் உரியனாதலின் உம்மை எதிர்மறை. |
மக்களின் உளவியல்பும் உலகியல் வழக்கும் நோக்கி முந்து நூலோர் அமைத்த இன்னோரன்ன இலக்கணச் சூத்திரங்கட்கு ஆரியரது மிருதி நூல்களையும் பிற ஏதுக்களையும் கருதி உரையாசிரியன்மார் உரை கூறிச் சென்றனர். இத்தகைய மரபுகளை மாணாக்கர் ஓர்ந்துணர்வாராக. |
சூ. 175 : | தாய்போற் கழறித் தழீஇக் கோடல் |
| ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப |
| கவவொடு மயங்கிய காலை யான |
(32) |
க - து : | இல்லறக் கிழமையளாகிய தலைவிக்குரியதோ ரியல்பு கூறுகின்றது. |
பொருள் :தன்னை முயங்குதலான் தலைவன் பெருமகிழ்வுறுங் காலத்து மேல் நின்று மெய்கூறும் தாயரைப்போலக் கழற்றுரை கூறி இன்புறத்தழுவிக்கோடல் ஆராய்தலையுடைய மனைக்கிழத்திக்கும் உரியதெனக் கூறுவர் புலவர். |
மனைக்கிழத்திக்கும் என்ற உம்மை, காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின் தாய்போற் கழறுதல் (கற்-10) காமக் கிழத்திக்கேயன்றி எனப் பொருள் தந்து நிற்றலின் இறந்ததுதழீஇய எச்ச உம்மை. |
தலைவனது கடமையும் தலைமைப்பாடும் அவனது அயன்மைக்கும் செயல்கட்கும் காரணமாதலை உணர்ந்தொழுகுதலின் "ஆய்மனைக் கிழத்தி" என்றார். |
சூ. 176 : | அவன்சோர்வு காத்தல் கடனெனப் படுதலின் |
| மகன்தாய் உயர்பும் தன்உயர் பாகும் |
| செல்வன் பணிமொழி இயல்பாக லான |
(33) |
க - து : | கற்பொழுக்கத்திற்குரியதொரு சிறப்புக் கூறுகின்றது. |