கற்பியல்185

அவையாவன    பரத்தையிற்    பிரிந்துவந்த   தலைவன்  இரத்தலும்
தெளித்தலுமாகக் கூறுமிடங்களாம்.
 

எ - டு :

"ஒரூஉ கொடியியல் நல்லார்" என்னும் மருதக்கலியுள்

'கடியர் தமக்கு யார்சொல்லத்தக்கார் மாற்று'
 

எனத்     தலைவன்     இரந்தகாலை     "வினைக்கெட்டு    வாயல்லா
வெண்மையுரையாது கூறுநின் மாயம்மருள்வா ரகத்து"
 

எனத்,   தான்  மருளேன்  என  உயர்த்துக்  கூறியவாறும்,  தலைவன்
தீதன்மை தேற்றக் கண்டீபாய்தெளிக்கு எனத் தெளிவித்த காலை
 

நீ கூறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றுஇனி

யார்மேல் விளியுமோ கூறு"
 

எனத் தன்னைப் புகழ்ந்து எண்ணியவாறும் கண்டுகொள்க.
 

சூ. 183 :

கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி

கிழவோன் வினைவயின் உரிய என்ப

(40)
 

க - து : 

இது தலைவற்குத் தற்புகழ்ச்சி குற்றமாகாத இடங் கூறுகின்றது.
 

பொருள் : தலைவி   முன்னர்த்தன்னைப்   புகழ்ந்து  கூறும்  கிளவி
தலைவன்   ஓதற்குப்  பிரிதல்  முதலாய வினையை  மேற்கொண்டவிடத்து
உரியவாகும் எனக்கூறுவர் புலவர்.
 

"இடனின்றி இரந்தோர்க்கொன் றீயாமை இழிவு" எனக்

"கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருளாகுமோ"
 

என்னும் தோழி கூற்றுள் தலைவன்  இளிவரவு கொள்ளேன் எனத்தன்னைப்
புகழ்ந்து கூறியவாறு கண்டுகொள்க.
 

சூ. 184 : 

மொழிஎதிர் மொழிதல் பாங்கற் குரித்தே
(41)
 

க - து : 

இது பாங்கன் கூற்றுநிகழ்த்தும் முறைமை கூறுகின்றது.
 

பொருள் :தலைவன்  கூறும்மொழிக்கு  எதிர்மொழி கூறுதல்  பாங்கற்
குரியதாகும்.  அஃதாவது வேட்கை காரணமாகத் தலைவன் கூறும்மொழிகள்
அவன் பெருமைக்கு  ஏற்பனவாக  இல்லை  எனக் கருதுமிடத்து அவற்றை
மறுத்துக்  கூறுதல்  பாங்கற்கு  உரியதாகும் என்றவாறு.  எனவே  ஏனைய
வாயில்கள் எதிர்மொழி கூறுதல் புலனெறி வழக்காகாது என்பது பெறப்படும்.