கற்பியல்187
எ - டு :

'அளிநிலை பொறா அது' என்னும் அகப்பாட்டினுள் 

(5)

"மணியுரு விழந்த அணியழி தோற்றம்

கண்டே கடிந்தனம் செலவே ஒண்டொடி

உழைய மாகவும் இனைவோள்

பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே"
 

எனப் பின்னர் ஆற்றுவித்தலைக்கருதி அழுங்கியவாறு கண்டுகொள்க.
 

சூ. 188 :

கிழவி நிலையே வினையிடத் துரையார்

வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்

(45)
 

க - து : 

இது வாயில்களின் கூற்றுப்பற்றியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :  தலைவன்  வினைவயிற்பிரிந்து சென்று வினை நிகழ்த்தும்
அவ்விடத்தின்கண்  சென்று  வாயிலார் தலைவியது நிலையினை உரைத்தல்
செய்யார். அவன்  அவ்வினையை  முடித்த வென்றிக்காலத்து அவர் கூற்று
விளக்கமுறத் தோன்றும்.
 

வினையிடத்துச்  சென்றுரைப்பின்    அஃதவற்கு   இடையூறாமாதலின்
'உரையார்' என்றும்  வினைமுடித்த பின் அவ்வென்றிக்  களிப்பால் அவன்
உள்ளம் விழா முதலியவற்றின் மேற்செல்ல வொட்டாமல் எடுத்துரைத்தலின்
விளங்கித் தோன்றும் என்றும் கூறினார். இதற்கு உரையாசிரியன்மார் கூறும்
உரை விளக்கம் பாசறைப் புலம்பலின் பாற்படுமென்க.
 

சூ. 189 :

பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்

நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்

பரத்தையிற் பிரிந்த காலை யான

(46)
 

க - து :

பரத்தையிற்      பிரிவின்கண்    தலைமக்கட்     காவதொரு
முறைமை  கூறுகின்றது.
 

பொருள் :  பரத்தை   காரணமாகப் பிரிந்த  காலத்தின்கண்  தலைவி
பூத்தமையறியின்     பூப்பின்    புறப்பாட்டெல்லையாகிய    பன்னிரண்டு
நாளினும் தலைமக்கள்   தலைவியை  விட்டுப்பிரிந்துறைவாரல்லர்   எனக்
கூறுவர் புலவர்.
 

இப்பிரிவு பெரிதும்  இடையிருவகையோர்க்கண் நிகழும் என்பது பற்றிப்
பன்மையாற் கூறினார் என்க.  அக்காலம்  கரு  வயிற்றுறுதற் குரியதாகலின்
நீத்தகன்றுறையார் என்ப என்றார்.