188கற்பியல்

சூ. 190 :

வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது
(47)
 

க - து : 

பாலை  ஒழுக்கமாகிய பிரிவுகட்குரிய  கால   வரையறை கூறத்
தொடங்கி  இச்சூத்திரத்தான் ஓதற்  பிரிவுக்குரிய கால  எல்லை
கூறுகின்றார்.
 

பொருள் :  பொதுக்  கல்வியல்லாத  சிறப்புக் கல்வியின்  பொருட்டுப்
பிரியும் ஓதற்பிரிவு  மூன்றாண்டுக்கால  எல்லையைக் கடவாது.  இளமையிற்
கற்கும்  பொதுக் கல்வியல்லாத சிறப்புக் கல்வி என்பது தோன்ற "வேண்டிய
கல்வி"  என்றார். மூன்று  இறவாது. எனவே  அதற்கு உட்பட்ட இரண்டும்
ஒன்றுமாகிய  ஆண்டுகள்  நிகழினும் இழுக்காதெனக்  கொள்க.  அந்தணர்
முதலாய  நாற்பாலாரும்  வேண்டும் கல்வி  கேள்வி பற்றி அகத்திணையுள்
கூறப்பட்டது.
 

இதற்கு நச்சினார்க்கினியர்  கூறும்  உரை  சமயத்துறை ஒன்றுமே பற்றி
நிற்றலின் குன்றக் கூறலாகுமென்க.
 

சூ. 191 : 

வேந்துறு தொழிலே யாண்டின தகமே 
(48)
 

க - து : 

பகைவயிற் பிரிவுக்குரிய கால எல்லை கூறுகின்றது.
 

பொருள் :   வேந்தர்க்கும்   அவரது    ஆணை    பெற்றோர்க்கும்
பொருந்திய,  பகைதணி வினைப்  பிரிவு  ஓர்யாண்டினது அகமாகிய  கால
எல்லையை உடையதாகும். தொழிலே என்னும் ஏகாரம் பிரிநிலை. ஏனையது
இசைநிறை.  துணைவயிற்பிரிவும்  பகைதணி  வினையேயாதலின் இதன்கண்
அடங்கும்.
 

சூ. 192 : 

ஏனைப் பிரிவும் அவ்வியல் நிலையும்
(49)
 

க - து : 

ஓதலும்   பகையும்  அல்லாத  பிரிவுகட்குரிய   கால  எல்லை
கூறுகின்றது.
 

பொருள் :ஓதலும் பகைதணிவினையும் அல்லது ஏனைய தூது, காவல்,
பொருள் ஆகிய பிரிவும் மேற்கூறிய இலக்கணத்தான் நிலைபெறும். என்றது:
இவையும் ஓர்யாண்டினது அகமாகிய எல்லையையுடையது என்றவாறாம்.
 

உரையாசிரியன்மார்      ஏனை      என்னும்    இடைச்சொல்லினை
ஒருமைக்குரியதாகக்    கருதி   இச்சூத்திரம்  பொருள்வயிற்   பிரிவுக்குக்
கூறியதாகக்   கொண்டு   தூது, துணை,  காவல்  ஆகியவற்றை  மேலைச்
சூத்திரத்துள்      அடக்குவர்.      தூதும்,     காவலும்,     துணையும்
வேந்தரல்லாதார்க்கும்   உரியவாகலின்  அதன்கண்   அடக்குதல்  மயங்க
வைத்தலாய் முடியும். ஏனை என்னும் இடைச்சொல் ஏனையது, ஏனையவை,
ஏனையவன், ஏனையவள்,