ஏனையவர் என ஐம்பாற்கும் முதனிலையாக வருதலின் அஃது முதனிலையளவாய்ப் பொதுப்பட நிற்கும் எனக் கோடலே நேரிதாகும். |
சூ. 193 : | யாறும் குளனும் காவும் ஆடிப் |
| பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப |
(50) |
க - து : | எண்ணிய பண்ணை[கற்-10] எனக் காமக்கிழத்தியர்க்கு ஓதப்பட்ட விளையாட்டு நிகழுமாறு பற்றிய மரபு கூறுகின்றது. |
பொருள் : காமக்கிழத்தியர் தாம் உறையும் இல்லையும், ஊரையும் கடந்து போய்த் தலைவனொடு யாறும் குளனும் காவும் புக்கு விளையாடி நுகரும் நுகர்ச்சிகளும் அவர்க்கு உரியவாகும் எனக் கூறுவர் புலவர். நுகர்ச்சி பலவாதலின் 'உரிய' என்றார். |
பதி = உறையுமிடம். அஃது அவர்வாழும் இல்லத்தினையும் ஊரினையும் ஒருங்குணர்த்தி நின்றது. பதியிகந்து நுகர்தலும் என்னும் உம்மை பதியிலிருந்து நுகர்தலேயன்றி என நிற்றலின் எச்ச உம்மையாம். |
எ - டு : | "பலரிவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால் |
| அலர்தொடங் கின்றால் ஊரே மலர |
| தொல்நிலை மருதத்துப் பெருந்துறை |
| நின்னொடு ஆடினள் தண்புனல் அதுவே" |
(ஐங்-75) |
இது புனலாட்டு நுகர்ந்தது. |
| 'புனவளர் பூங்கொடி' என்னும் மருதக்கலியுள் | (92) |
| "நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் | |
| தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார் | |
| ஆனா விருப்போ டணியயர்ப காமற்கு | |
| வேனில் விருந்தெதிர் கொண்டு" | |
எனவருவது பொழிலாட்டு நுகர்ந்தது. |
சூ. 194 : | காமஞ் சான்ற கடைக்கோட் காலை |
| ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி |
| அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் |
| சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே |
(51) |
க - து : | கற்பொழுக்கமாகிய இல்லற வாழ்வின் குறிக்கோள் இது என்கின்றது. |