பொருள் : அகப்பொருள் மாந்தர்தம் கூற்றாக வருமிடத்து நால்வகைச் சொற்களும் சொற்றொடர்களும் சொல்லதிகாரத்து ஓதப்பட்டவாறன்றிப் பொருள் திரிந்திசைக்குமாயினும் அங்ஙனம் வேறுபட்டிசைக்கும் அப்பொருளும் அவற்றிற்குப் பொருளாகற்குப் பொருந்தும். அவ்வழி அப் பொருள்திரிபிற்கேற்ப அச்சொற்களின் உறுப்புக்கள் திரிந்திசைக்க மாட்டா எனக் கூறுவர் புலவர். |
இப் பொருள்நிலை அகப்பொருள் மாந்தர்தம் கூற்றுப் பற்றிய மரபாகலின் சொல்லதிகாரத்துள் ஓதப்பெற்ற குறிப்புமொழி வகைகளுள் அடங்காமையின் வேறாக ஓதப்பட்டதென்பது விளங்க "இயையும் மன் பொருளே" என்றார். அங்ஙனம் வேறுபட்டு வரினும் அவையும் அச்சொற்களுக்குப் பொருளாக அமைந்து திகழும் என்றதனான் "மன்" ஆக்கத்தின் கண்வந்தது. |
எ - டு : | கொல்வினைப் பொலிந்த |
(அக-9) |
என்னும் அகப்பாட்டினுள் |
| "குன்றுபின் ஒழியப் போகி உரந்துரந்து |
| ஞாயிறு படினும் ஊர்சேய்த் தெனாது |
| துணைபரி துரக்குந் துஞ்சாச் செலவின் |
| எம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாண் |
| ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப் |
| பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் |
| கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக் |
| கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் |
| பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் |
| தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ |
| நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் |
| அந்தீங் கிளவிக் குறுமகள் |
| மென்றோள் பெறனசைஇச் சென்றஎன் நெஞ்சே" |
எனத் தன் நெஞ்சினை உயர்திணைப் பாற்படுத்துத் தனக்குரிய பண்பு செயல்களைக் கற்பித்துக் கூறும் தலைவன் நெஞ்சிற்கு உயர்திணை வினை கொடுத்துத் தோய்ந்தனன் கொல்லோ எனச் சொல்லுறுப்பினைத் திரிக்காமல் தோய்ந்தன்று கொல்லோ என அஃறிணைக்குரிய முடிபையே கூறினமை கண்டு கொள்க. |
| குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ |
| வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் |
| கண்களி பெறூஉம் கவின்பெறு காலை |
| எல்வளை நெகிழ்த்தோற்கு அல்லல் உறீஇயர் |