254பொருளியல்

6) எழில்   என்றது,   அவ்வப்   பருவத்தே   பருவ   வனப்பினைச்
சிறப்பித்து நிற்கும் பொலிவாம்.
 

7) சாயல் என்றது, உள்ளத்தான் உணரத்தக்கதொரு மென்மைத் தன்மை
'நீரினும் இனிய சாயல்' என்றாங்கு வரும்.
 

8) நாண் என்றது, செய்யவும், பேசவும், எண்ணவும்  தகாதனவற்றின்கண்
சாராமல் தன்னைப் பேணிக்கொள்ளும் பண்பாகும்.
 

9) மடம் என்றது, கொளுத்தக் கொண்டு கொண்டது விடாத தன்மை.
 

10) நோய் என்றது, பிறர்க்குப் புலப்பட நில்லாத  நெஞ்ச  நலி  வினை.
இதனை "  நோமென்   நெஞ்சே   நோமென்  நெஞ்சே"  (குறு-4)   என
வருமாற்றான் அறிக.
 

11) வேட்கை என்றது, இன்றியமையாது  எனக்கருதும்  பொருள்கள்மேற்
செல்லும்   நகையாகும்.   அஃதாவது   நீர்   வேட்கை   போன்றதொரு
அவாவாகும்.
 

12) நுகர்ச்சி  என்றது,  உவத்தலும்  முனிதலுமின்றிப்  பருப்பொருளும்,
நுண்பொருளும்  ஆகியவற்றைப்  பொறிகளானும்  மனத்தானும்  துய்க்கும்
உயிர்க்குணமாம்.
 

இவற்றுள்  உரு  முதல்  மடம்   ஈறாய  எட்டும்  பெரும்பான்மையும்
பெண்பாற்கும்  ஏனைய  இருபாற்கும்   பொதுவாயும்   அமைந்து  வரும்.
அவைபோல்வன பிறவாவன : அன்பு,  அருள்,  காதல்,  பொறை,  மானம்
முதலியவையாம்.  இவை  நெஞ்சத்தாற் கொள்ளப்படும்  என்றலின்  இவை
நாடகவழக்கான்  அமையும்   பொருள்கள்  அல்ல  உலகியல்  வழக்காகிய
பொருள்களேயாம் என்பது வரும் சூத்திரத்தான் விளங்கும்.
 

சூ. 249 :

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மை யான

(53)
 

க - து :

மேற்கூறிய ஒப்பு முதலாகிய பொருள்கள் நல்லிசைப்புலவோரான்
செய்யப்பெறும் புலனெறி வழக்கின்கண்  எக்காலத்தும்  திகழும்
உள்பொருளேயாம் என்கின்றது.
 

பொருள் : செய்யுள்    செய்யும்   நல்லிசைப்   புலவோர்   அகமும்
புறமுமாகிய ஒழுகலாற்றிற்கு உரியராகக்  கொண்ட  இமையா  நாட்டத்தவர்
என்னும்   புத்தேளிரிடத்தும்,  அலையெறியும்   கடல்   சூழ்ந்த   நானில
மாந்தரிடத்தும் மேற்கூறிய ஒப்பு முதலாகிய