நூ. 3 : தறுகண்   மட்டுமே   வீரம்   எனத்தகும்  என்கிறார்.  கல்வி
முதலியவற்றையும்   இடைக்காலச்    சான்றோர்கள்    "வீரன்  தாளினை
விளங்க   நோற்றபின்   (சீசி)  "ஈரமனத்தினர்     யாதும்    குறைவிலர்
வீரமென்னால்     விளம்புந்தகையதோ"       (திருத்தொண்டர் புராணம்)
எனக் குறிப்பிட்டுள்ளனர். நகை யூ அழுகை.  இளிவரல்   யூ   மருட்கை.
அச்சம் X பெருமிதம்.   வெகுளி   யூ உவகை  என முற்குறித்தவற்றிற்குப்
பிற்குறித்தவை மறுதலைச் சுவையாகலாம் என்பது தோன்றுகின்றது.
 

நூ. 4 : பேதமை-மடன் இவற்றிடையே   உள்ள   நுண்ணிய வேறுபாடு
நன்கு புலப்படுத்தப்படல் வேண்டும்.
 

நூ. 5 : மூதிற்பெண்டிர்   கசிந்தழல் - சுவை    என்னும்   நோக்கிற்கு
இது பொருந்தும். மெய்ப்பாடு பெருமிதம்   எனலே   நேரிது.   இச்செய்தி
நன்கு விளக்கப்படல்வேண்டும்.
 

நூ : 7.   'எருமையன்ன'     'உறக்குந்     துணையதோர்'   என்பன
மருட்கைக்குத் தக்க எடுத்துக்காட்டாகா என்ற விளக்கம் அழகிது.
 

நூ. 7 : 'உறுப்பறை'   முதலிய   இழவு   பற்றி   வந்த வெகுளி. இது
நிகழ்ச்சிபற்றிக் காய்தல்.   அஃது    இல்லது   காய்தல்.   இவற்றிடையே
வேறுபாடு உண்டு.   எனவே   பேராசிரியர்   விளக்கம்  ஏற்புடைத்தாகத்
தோன்றுகிறது.  இவை அகம், புறம் இரண்டற்கும் பொதுவாகலானும் இவரே
பல அகப்பொருட்  செய்திகளை  எடுத்துக்காட்டாகத்  தந்துள்ளமையானும்
இவை   இல்லாத   வழியே   ஆசிரியர்  விதந்து  கூறுதலைக்   கோடல்
வேண்டுமாகலானும்   நிகழ்ச்சிபற்றிக்     காய்தல்     ஆண்டு   விதந்து
கூறப்படாமையானும்   இதனை     மறுத்ததன்    பொருத்தம்     ஈண்டு
ஆராய்தற்குரியது.
 

நூ. 14 :   காதொன்று     என்பதன்    விளக்கம்   வலிந்துரையாகத்
தோன்றுகின்றது. நூ. 15.    அல்குல்தைவரல் :   இதற்கு   இவர்   கூறும்
உரையே    பேராசிரியரால்   குறிப்பாகக்   கூறப்பட்டுள்ளது.   உரையில்
இடையே இது  என்ற சொல் விடுபட்டமையால் பேராசிரியர் உரை தவறாக
உளங்கொள்ளப்பட்டுள்ளது.   "மேல்   உடை  பெயர்த்துடுத்தல் ஆகலான்
அதன்வழித்   தோன்றுவது   இது.   உடை     பெரிதும்     நெகிழ்ந்து
காட்டுதலாயிற்று. அதனைப்  பாதுகாத்தலான் அவ்   அற்றம்   மறைக்கும்
கையினை அல்குல் தைவரல் என்றார் என்பது   என்பதனையும் அல்குலின்
நெகிழ்நூற்    கலிங்கமொடு"    என்ற   எடுத்துக்காட்டுத்   தொடரையும்
நோக்குதல் வேண்டும்.