17.ஒழிதல் தங்குதல் என்னும்  பொருளினும் எழுத்ததிகாரத்தும் பொருள்
கொள்ளக்கிடத்தலின் தன்னிடத்தே தங்குதலை   தன்   இடத்து   ஒழிதல்
என்பதன்  பொருளாகப்   பேராசிரியர்   கொண்டதற்கண்   இழுக்கேதும்
புலப்படவில்லை.    ஒட்டியமெய்     ஒழித்து - தான்   ஊர்ந்தமெய்யைத்
தங்கச்செய்து என்று பொருள் செய்வதன்கண் தவறு போதரவில்லை.
 

நூ. 17 : கலங்கிமொழிதலுக்கும், கையறவுரைத்தலுக்கும்  பெருந்திணைத்
தலைவி பற்றிய பாடற்பகுதி  எடுத்துக்காட்டாக அமைதல் பொருந்துவதாகத்
தோன்றவில்லை.    இவ்விடத்துப்       பேராசிரியர்காணும்    விளக்கம்
உளங்கொளத்தக்கது.   அகத்திணைக்கண்   கைக்கிளை,   பெருந்திணைப்
பகுதிகளை இவர் தலைமகனுக்கே கொண்டுள்ளார். (நூ - 103)
 

நூ. 21 : இவர்   கூறும்   பொருள் அன்னபிறவும் அவற்றொடு சிவணி
என்ற   நூற்பா   உரையாலேயே   பெறப்படுதலின்   புகுமுகம்   புரிதல்
முதலியவையல்லாத   இடத்து   இன்பத்தை     வெறுத்தல்   முதலியவை
மெய்ப்பாட்டுப் பொருள்களாம் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது. 13
 

நூ. 22 : நெஞ்சு   அழிந்த   வழியே    அறன்     அழித்துரைத்தல்
நிகழுமாதலின்  அறனளித்துரைத்தல்  என்ற  பாடமே   சிறக்கும்   என்று
தோன்றுகிறது.    'எம்மெய்யாயினும்'     என்பதற்கு   "நுதலும்  முகனும்"
என்ற பாடற்பகுதி   எடுத்துக்காட்டாமோ என்பது ஆராயத்தக்கது. ஆண்டு
ஒத்த   பொருள்களே   உவமமாகக்   கொள்ளப்பட்டுள்ளன.   'ஒப்புவழி
உவத்தல்'   என்பதன்     எடுத்துக்    காட்டுக்களில்   முதலாவதன்கண்
உவத்தல் இருப்பதாகத் தோன்றவில்லை.   இரண்டாவதன்கண்  ஆசையே
உள்ளது.     கலக்கம்      பெருந்திணைக்குரிய     எடுத்துக்காட்டினைக்
கொண்டுள்ளது. இதனைப் பேராசிரியர் போன்று சற்று  விளக்கியிருக்கலாம்.
இன்பத்தை  வெறுத்தல்   முதலியன    பெரும்பான்மையும்   தலைவிக்கே
உரியவாக  நிகழும்  என்ற  விளக்கம்      அகத்திணை   மெய்ப்பாட்டுப்
பொருள்கள் அனைத்திற்கும் கொள்ளப்படல் வேண்டும்.
 

நூ. 23 :   "இன்னமாகவும்   நன்னர்   நெஞ்சம்"    பெருமிதத்திற்குப்
பொருள்.  "கானலுங் கழறாது"   உவகைப்  பொருள்   என்கிறார்.  இவை
இளிவரற் பொருளாகவே  தோன்றுகின்றன. இவை போல்வன இன்னும் சில
உள. இவை இன்ன  மெய்ப்பாட்டின் பொருள் என்று கூறுமிடத்து அதனை
நிறுவுவதற்கு விளக்கம் தேவைப்படுகிறது. 'எம்மெய் யாயினும் ஒப்புமை 
 


13. அன்னபிற என்பதனுள் அடங்காதென்பது என் கருத்து. உரையானும்
ஓரளவு விளங்கும்.