3. உள்ளுங்காலை என்ற மிகைச்சொல்லுக்கு உவமத்திற்கு வேண்டுவன கற்பித்து உயர்ந்ததாக்கிக் கோடலைக் குறிப்பிட்டு 'மாக விசும்பில் திலகமொடு பதித்த திங்கள் அன்னதிருமுகம்' என்ற எடுத்துக்காட்டுத் தந்தது அழகிது. |
4. 'அந்நாற்பண்பே' எனத் தேற்றேகாரம் கொடாது 'பண்பும்' என உம்மை கொடுத்தது உவமம் கிழக்கிடு பொருள். நகை முதலாய (சுவை) மெய்ப்பாடு இவை காரணமாகவும் வரும் என்பதுபற்றி - என்ற புதிய விளக்கம் இனியது. காதல் என்பதற்குத் 'தன்னலம் விழையாத பண்பு' என்ற பொருளும் அதன் எடுத்துக்காட்டும் ஆராயத்தக்கன. இதற்குப் பேராசிரியர் கூறும் உரை - நலனும் வலியும் இல்வழியும் உண்டாக்கி உரைப்பதாம். அவ்வுரை சுவைத்து இன்புறத்தக்கது. |
6. 'நுதலிய மரபின்' என்பதன் விளக்கம் இனிது. பேராசிரியர் கூறும் திணைமயக்கம், பால்மயக்கம் என்பன யாவும் திணையிற்பிறழ்ந்து வருதல் என்றே கொள்ளப்படல் வேண்டும் என்பதும் மயக்கம் என்பது பொருந்தாது என்பதும் சுட்டப்பட்டுள்ளன. ஒத்தல் என்பது உவமத்திற்கும் பொருளுக்கும் பொதுவாகிய தன்மையேயன்றி அப்பொருள்கள் அல்ல என்ற விளக்கம் இனிது. |
7. உவமத்தொகை - உவம உருபுத் தொகைத்தொடர் உவமத்தொகைமொழி என்ற பாகுபாடுகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. |
சுட்டிக்கூறா உவமம் என்ற தொடரின் விளக்கம் நன்கு தரப்பட்டுளது. "உவம உருபிலது உவமத் தொகையே" என்ற நன்னூல் நூற்பாவின் குறைபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. தொகை உவமை - எடுத்துக்காட்டுவமை என்பன குறைபாடுடைய குறியீடுகள் என்ற செய்தி விளக்கப்பட்டுள்ளது. இவை யாவும் இனிய புதிய செய்திகளாம். |
8. காக்கைச் சிறகன்ன கூந்தல் என்ற உவமம் பொருந்தாமை விளக்கப்பட்டுள்ளது. காக்கைச் சிறகன்ன கருமயிர் என அதன் நிறம் பற்றி உவமம் கூறின் பொருந்தும் என்பது சுட்டப்பட்டுள்ளது. |
ஒப்பு - வினை, பயன், மெய், உரு என்பனவற்றோடு தகவு அடிப்படையாகவும் அமைதல் வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது. 'உவமும் பொருளும் ஒத்தல்வேண்டும்' என்று பாடங் கொண்ட உரையாசிரியர் உரை கூறியதுகூறல் ஆதல் விளக்கப்பட்டுள்ளது. 9. உருவகம் வேறுபட வந்த உவமத்தோற்றத்துள் அடங்கற் பாலது என்பதனைப் பேராசிரியர் உரை கொண்டும் விளக்குகிறார். |