எ - டு : | ....... ....... நெஞ்சே உறழ்ந்திவனைப் |
| பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் |
| என்றடி சேர்தலுமுண்டு |
(கலி-88) |
இது தலைவி தலைவன் பரத்தைமையுணர்ந்தும் "புறஞ் சாய்த்துக் காண்டைப்பாய் நெஞ்சே" என்பதனான் அதனை நிறையாகக் கொண்டு அருளினமை கண்டு கொள்க. |
வேம்பின் பைங்காய்என் தோழி தரினே |
தேம்பூங் கட்டி என்றனிர் |
(குறு-196) |
என்பது தலைவன் தலைவியின் குறையை நிறையாகக் கொண்ட மனமாட்சியைப் புலப்படுத்தும். |
9. உணர்வாவது : ஒருவர் ஒருவர் தம் உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு. |
எ - டு : | கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் |
| சொற்கள் என்னபயனுமில என்பதனாற் கண்டு கொள்க. |
10. திருவாவது : தெய்வத்தன்மை. அஃதாவது கண்டாராற் போற்றப்பெறும் தெய்வப் பொலிவு. திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி என அவர் கொள்கைக்கேற்பப் பொருள் கூறுவார் பேராசிரியர். அஃது ஒப்புமைப் பண்பாதற்கு ஏலாமையறிக. |
எ - டு : | அஞ்சுடர்நீள் வாண்முகத்து ஆயிழையும், மாறிலா |
| வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண்-டஞ்சி |
| ஒருசுடரு மின்றி உலகு பாழாக |
| இருசுடரும் போந்தவென் றார் |
(திணைமாலை-71) |
இதன்கண் தலைவியையும் தலைவனையும் தெய்வத்தன்மை புலப்படக்கண்டோர் கூறி மகிழ்ந்தவா றறிந்து கொள்க. உரு வடிவழகு; திரு வியந்துணரும் தெய்விகப் பொலிவு. |
இனி, அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கிலும் இழிசினர் கண்ணும் ஈண்டுக் கூறப்பெற்ற ஒப்புமைகள் ஒருங்கு நேராமையான் அவர்தம் காம ஒழுக்கம் அகனைந்திணைக் குரித்தாகாது பெருந்திணையின் பாற்பட்டு அடங்குமென அறிக. |
சூ. 275 : | நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி |
| வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை |
| இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை |
| என்றிவை இன்மை என்மனார் புலவர் |
(26) |