336மெய்ப்பாட்டியல்

ஏழைமையை     மறந்தவழி    உள்ளத்தே    தலைமைச்   செருக்கு மீதூருமாகலின்    அது        காதற்கேண்மைக்கு      ஒவ்வாமையான் விலக்கப்பட்டதென்க. மற்று, இதனைத்  தலைவிக்கே உரியதாகக்  கொண்டு
ஏழைமை,   அறிவின்மை.  அஃதாவது பேதைமை  மறப்பு  எனப்பொருள்
கோடலுமாம்.
 

இதனையும் இரண்டாகக் கொள்வர் பேராசிரியர். மறப்பு, மறவி என்பார்
அது   பொச்சாப்பு  எனமேல் விலக்கப்பட்டமையான் கூறியது கூறலாதல்
காண்க.
 

10. ஒப்புமையாவது :   ஒருவரை  ஒருவர்  வடிவானும்   வனப்பானும் பிறரொடு ஒப்பிட்டு  நோக்குதல். அஃதாவது  இன்னாளை ஒப்பாள்  இவள்
எனத்தலைவனும்    இன்னானை   ஒப்பான்   இவன்    எனத்தலைவியும் கருதுதலாம்.    அந்நோக்கு    அறக்கற்பிற்கு    ஒவ்வாத  பண்பாகலின்
விலக்கப்பட்டது.
 

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் 

யாருள்ளி நோக்கினீர் என்று 

(குறள்-1320)
 

எனத்  தலைவியின்  இல்லது  காய்தல் பற்றி வரும் கூற்றில்  இப்பொருள்
வந்தவாறு கண்டுகொள்க.
 

இவை   இன்மை   வேண்டுமென்றதனான்   அகனைந்திணை  பற்றிய நல்லிசைப் புலவோர் செய்யுட்கண் உதாரணம் காணல் கூடாமை தெரிக.
 

இனி,   இவை சுட்டி ஒருவர்  பெயர்  கூறி  'உள்ளோன் தலைவனாக
இல்லது    புணர்த்துச்     செய்யப்படும்   தொடர்நிலைச்   செய்யுட்கண்
ஒரோவிடத்து  வருமாறும் உலக  வழக்கின்கண்  ஆங்காங்கே நிகழுமாறும்
நோக்கி இவற்றைத் தெரிந்து கொள்க.
 

சூ. 276 :

கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும் 

உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் 

நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே 

(27)
 

க - து :
 

மேற்கூறிய  மெய்ப்பாட்டிற்குரிய  பொருள்களையும் அவற்றான்
தோன்றும் எண்வகை மெய்ப்பாட்டினையும்  திரிபின்றி அறிந்து
கோடற்குரிய   கருவி   கூறுமுகத்தான் இவ்வியலுக்காவதொரு
புறனடை கூறுகின்றது.
 

பொருள் :   மன்பதையுள்   உயர்திணையாய   மக்களிடத்தும், பிறவு முளவே அக்கிளைப்  பிறப்பே  (மரபியல்)  எனப்பெற்ற  உயிர்களிடத்தும்
பல்வேறு நிலைகளில் நிகழும் நிகழ்ச்சிகளையும்