உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக் |
கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே |
(பொருள்-45) |
எனவரும் பொருளியற் சூத்திரங்களானும் |
கிழவி சொல்லின் அவளறி கிளவி |
(உவம-26) |
தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது |
(உவம-27) |
கிழவோற் காயின் உரனொடு கிளக்கும் |
(உவம-28) |
ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே |
(உவம-29) |
இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் |
உவம மருங்கிற் றோன்று மென்ப |
(உவம-30) |
கிழவோட் குவமம் ஈரிடத் துரித்தே |
(உவம-31) |
கிழவோற் காயின் இடம்வரை வின்றே |
(உவம-32) |
தோழியும் செவிலியும் பொருந்து வழிநோக்கிக் |
கூறுதற் குரியர் கொள்வழி யான |
(உவம-33) |
எனவரும் உவமவியற் சூத்திரங்களானும் பிறவற்றானும் அறியலாம். |
மற்று, உவமம் - உவமை என்னும் சொற்கள் தம்முட் பொருள் வேறுபாடுடையனவாகும். உவமம் என்பது உவமிக்கும் பொருளையும் உவமை என்பது அதன் தன்மையையும் குறிப்பனவாகும். அவற்றால் விளக்கம் பெறுவது பொருளாகும். உவமத்தை வடநூலார் உபமானம் என்றும் பொருளை உபமேயம் என்றும் கூறுவர். |
உவமம் என்பது சொல்லப்படும் பொருளை விளக்கம் செய்யக் காட்டாக வருவது, அதனான் விளக்கம் பெறுவது பொருள். அவ்இரண்டற்கும் உரிய பொதுத்தன்மையே உவமை எனப்படும். உவமம் - பொருள் இவற்றின் பொதுத்தன்மையைத் தொடர்பு படுத்திக்காட்டும் சொல் உவமச்சொல்லாகும். உவமச்சொல்லை உவம உருபு என வழங்குவார். அஃதாவது : |
'பவளம் போற்செந் துவர்வாய்' என்னும் தொடருள் பவளம் என்பது உவமம். வாய் என்பது பொருள். செந்துவர் என்பது உவமை. போல் என்பது உவமஉருபு. இங்ஙனம் ஆசிரியர் வேறுபடுத்து ஓதுவதனை ஓராத உரையாசிரியன்மார் பல விடத்தும் மயங்குவாராயினர். திரிபுணர்ச்சியான் உவமா என்னும் வடசொல்லே உவமை என வந்ததாகப் பலர் மயங்குவர். உவமை என்பது உவமப்பொருளின் தன்மையைக் குறிக்கும் என்பதை, |