களவியல் கற்பியல்களுள் ஓதப்படும் கிளவிகளும், பிரிவுகளும், பரத்தையிற்பிரிவும் காமக்கிழத்தியர் கூட்டமும் தலைமக்களாக ஓதப் பெறுவார் யாவர்க்கும் உரியவெனக் கருதுதலும், களவியலுள் ஓதப்பெறும் நால்வகைப் புணர்வும், மெய்தொட்டுப் பயிறல் முதலாய கிளவிகளும் பிறவும் ஒவ்வொருவர் மாட்டும் முறையாக நிகழும் எனக்கோடலும் இரவுக்குறி, பகற்குறி, உடன்போக்கு, வரைவுகடாதல் முதலியவை முறையே நிகழ்ந்த பின்னரே வரைவு நிகழும் எனக்கோடலும் இலக்கணக் கோட்பாடுகளைப் பிறழ உணர்தலாகும். |