பக்கம் எண் :

உவமவியல்347

சிறப்பு,   நலன்,  வலி  என்பவை   அப்பொருளின்கண் அமைந்துள்ள
பண்புகள். காதல்  என்பது கூறுவோன்  அப்பொருளின்கண்  கொண்டுள்ள
பேரன்பு. சிறப்பாவது : கருதி மகிழத்தக்க உயர்வு.
 

எ - டு :

முரசுமுழங்கு தானை மூவரும் கூடி 

அரசவை யிருந்த தோற்றம் போலப் 

பாடல் பற்றிய பயனுடை எழாஅல்  

(பொரு.54-56)
 

எனவரும்.  மூவேந்தரும்  ஒருங்கு  இணைந்துறைதல் அரிதாக நிகழ்தலின்
சிறப்புடைத்தாயிற்று.   அவ்வுவமத்தான்   கூத்தும்  இசையும்  வாச்சியமும்
ஒருங்கொத்து நிகழ்கின்றமையைப்   புலப்படுத்தலின் அப்பாடலின்  சிறப்பு
உணர்த்தப்பட்டவாறு   கண்டு   கொள்க.  நலனாவது : வனப்பு  முதலிய
கவினுறு பண்புகள்.
 

எ - டு :

 ஓவத்தன்ன இடனுடை வரைப்பின் 
(புற-25)
 

இதன்கண்   புனையப்பெறும்   ஒவியத்தை   உவமங்  கூறியவதனான்
வளமனையின் செயற்கையழகு புலப்படுமாறு  கண்டு கொள்க.  காதலாவது :
தன்னலம் விழையாத பேரன்பு.
 

எ - டு :

என்கைக் கொண்டுதன் கண்ணொற்றியும் 

தன்கைக் கொண்டென் நன்னுதல் நீவியும் 

அன்னை போல இனிய கூறியும்  

(நற்-28)
 

இதன்கண்   கைம்மாறு   கருதாத  அன்னையை உவமங் கூறியதனான் தலைவனது    பேரன்பு    புலனாதலைக்   கண்டுகொள்க.   வலியாவது :
மாற்றருந்துப்பு.
 

எ - டு :

அரிமா அன்ன அணங்குடைத்துப்பின் திருமாவளவன்.
  

இதன்கண்   அரிமாவினை   உவமங்   கூறியதனான்  வளவனின் பிற
பண்புகளினும் மிக்க அவனது வலிமை புலனாதல் காண்க.
 

சூ. 281 :

கிழக்கிடு பொருளொ டைந்து மாகும் 
(5)
 

க - து :

இதுவுமது.
 

பொருள் :உவமங்   கூறுதற்கு     நிலைக்களமென      மேற்கூறிய
நான்குமேயன்றிக் கிழக்கிடு பொருளொடு  கூடி   ஐந்தாக   வருதலுமாகும்
எனக் கூறுவர் புலவர்.
 

கிழக்கிடுதல்  =  தாழ்வுறல்.  இதனைக்  ''கிளைஇய  குரலே   கிழக்கு
வீழ்ந்தனவே'' (குறு-337) என்பதனான் அறிக. இதனான் தாழ்ந்த பொருளும்
உவமமாகக்   கூறுதற்குரிய   நிலைக்களனாக வருமென்பதாயிற்று. ஈண்டுப்
பொருளென்றது பண்பினைச் சுட்டி