எஞ்ஞான்றும் யாழொடு திகழ்தலான் அவரை யாழோர் என்றும் அவர்தம் புணர்ப்பினை யாழோர் கூட்டம் என்றும் வழங்குதல் தொன்னூலார் மரபு. வடநூலார் அவரைக் கந்தருவர் என்றும் அவர்தம் கூட்டத்தைக் காந்தருவம் என்றும் மொழிபெயர்த்து வழங்குவர், "யாழோரியல்பு" என்றது உரியோர் கொடுப்பக் கொள்ளாமல் ஊழ்வயத்தான் இணைந்து எஞ்ஞான்றும் பிரிவின்றி என்றுமோர் இயல்பினராய் ஒழுகும் தன்மையையாகும். அவரை உவமங் கூறினார், |
உவமப் பொருளின் உற்ற துணரும் |
தெளிமருங் குளவே திறத்திய லான |
(உவம-20) |
என்னும் இலக்கணத்தான் ஈண்டு ஓதப்பெறும் கிழவனும், கிழத்தியும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாராய் இறப்பும் பிணியும் மூப்புமின்றி எக்காலத்தும் ஒருதன்மையராய்த் திகழ்வோராவார் என்னும் நாடகவழக்கினை உணர்த்துதற்கென்க. மறையோர் தேஎத்து மன்றல் எட்டாவன : |
1. | கரணமொடுபுணரக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை வரைந்து கொள்ளும் திருமணமன்றல் (கற்-1) |
2. | கொடுப்போரின்றிக் கரணமொடு கிழவன் கிழத்தியைத்தன் மனைக்கண் வரைந்து கொள்ளும் நறுமணமன்றல் (கற் - 2) |
3. | கொண்டுதலைக்கழித்தவிடத்து இடைச்சுரத்துக் கற்பொடு புணர்ந்த கௌவையான் நிகழும் கடிமணமன்றல் (களவு - 50) |
4. | குலவழக்கும் குடிமரபும் பற்றிப் பிறப்புரிமையான் வரைந்து கொள்ளும் முறைமணமன்றல் (கற் - 32) |
5. | பாலது ஆணையான் நிகழும் தெய்வமண மன்றல் (களவு - 1) ஏனை மணங்கட்கும் பாலதாணை காரணமாயினும் ஏனையவற்றிற்குத் துணைக் காரணமும் நிமித்த காரணமும் உளவாகலான் அவை பற்றி அவற்றிற்குப் பெயர் கொடுத்துத் தெய்வமணம் ஊழாகிய முதற்காரணத்தளவே பற்றி நிகழ்தலின் சிறப்புப்பெயர்த்தாயிற்று. அதனான் அஃது யாழோர் கூட்டம் எனச் சிறப்பிக்கப்பட்டது. |
6. | ஏறுதழுவல் முதலாய வீறுபற்றிக் கிழத்தியைப் பரிசிலாகப் பெற்று வரையும் அருமணமன்றல் [முல்லைக்கலி - 4] |
7. | புறத்திணை ஒழுகலாற்றின்கண் பகைவரைவென்று அவர் தம் மகளிரை உரிமைபூண்டு வரையும் பெருமணமன்றல் |