10களவியல்

சிறத்தல்     தலைவிக்கும்      ஐயம்,   தலைவற்கும்  உரிய என்பது
பின்வரும்      "வண்டே       இழையே"    என்னும்    சூத்திரத்தான்
உய்த்துணரலாகும்.     அச்சமும்    நாணும்     மடனும்    பெண்மைக்
குரியவையாகலான் தலைவிக்கு  ஐயம்     தோன்றுதலில்லை.    ஒருகால்
ஐயுறினும் தலைவி    ஐயுற்றாளாக்   கூறுதல்  புலனெறிவழக்காகாமையான்
நூலோர் கூறாராயினர்.
 

"உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி

ஐயக் கிளவி ஆடூஉவிற்குரித்தே"

(43)

எனப்  பொருளியலுள் இதனை விதியாகக் கூறுவார் ஆசிரியர்.
 

எ - டு :

"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு", எனவரும்.
 

இனித்    திருத்தொண்டர்புராணத்துள்    நம்பியாரூரைக்      கண்ட
பரவையார் ஐயுற்றாளாகச்  சேக்கிழார்   கூறுமாறென்னையெனின்?    அது
சுட்டியொருவர்    பெயர்    கொண்டு கூறிய வரலாற்று நிகழ்ச்சி யாகலின்
அது "புரைதீர் காமம் புல்லிய வகை" பற்றி வந்த பாடாண்     பகுதியாய்ப்
"புறத்திணை மருங்கிற் பொருந்தி" வந்த இலக்கணநெறி  என அறிக.
 

சூ. 96 :

வண்டே இழையே வள்ளி பூவே

கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று

அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ

நின்றவை களையும் கருவி என்ப.

(4)
 

க - து :

சிறந்துழி   ஐயுற்றதலைவன்  ஐயங்களைந்து துணிதற்குரிய கருவி
இவை என்கின்றது.
 

பொருள் :பயின்றதன்   மேலல்லது    செல்லாத   கொங்கு தேர்ந்து
தாதூதுதம்    வண்டும்,    கம்மியராற்    செய்யப் பெற்றதென விளங்கும்
அணிகலனும்,  தோளின்கண்    எழுதப்பெற்றுள்ள    தொய்யிற்கொடியும்,
செவ்விகுறைந்து   திகழும்    சூடியபூவும்    மருட்சியைப்  புலப்படுத்தும்
விழியும்,       செய்வதறியாது   புரியும்   தடுமாற்றமும்,   மூடித்திறக்கும்
இமையும், ஆராய்ச்சி   இன்மையான்   எழும் அச்சமும், அவைபோல்வன
பிறவும்   தலைவன்பால்   நிகழாநின்ற   ஐயத்தைக் களையும் கருவிகளாம்
என்று கூறுவர் புலவர்.
 

இவையாவும்     மானிட   மகளிர்க்கன்றித் தெய்வப் பெண்டிர் மாட்டு
அமையா என்பது   நூலானும்,   உய்த்துணர்வானும் அறியப்பட்டமையான்
ஐயங்களையும் கருவிகளாயின.   நிகழ  நின்ற    ஐகளையும் கருவி எனப்
பிரித்துப் பொருள் கொள்க.