எனவரும் சிலப்பதிகார வென்பாவும், பின்பனிக்காலம் பிரிவுக்கும். இளவேனில் கூடலுக்குமே ஏற்புடைத்தென்பதை வலியுறுத்தல் காண்க. |
13. | இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்1 உரியதாகும் என்மனார் புலவர். | (13) |
|
ஆ.மொ.இல. |
The poets say that when two kinds of separation take place permanently it is suitable (it-the later part of the snow-season). |
இளம்பூரணர் |
13. இருவகைப் பிரிவும்.. . . . . . . புலவர். |
இது பாலைக்கு உரிய பொருளாம் ஆறு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) இருவகை பிரிவும்-இருவகைப் பிரிவான தலைமகளைப் பிரிதலும் தலைமகளை உடன்கொண்டு தமர்வரைப் பிரிதலும், நிலைபெற தோன்றலும்-நிலைபெறத் தோன்றலும், உரியது ஆகும் என்மனார் புலவர்-பாலைக்கு உரிய பொருளாம் என்று கூறுவார் புலவர். |
உம்மை1 எச்ச உம்மையாகலான், நிலைபெறத் தோன்றாது பிரிதற்குறிப்பு 2நிகழ்ந்துழியும் பாலைக்கு உரிய பொருளாம் என்று கொள்க. அதிகாரப்பட்டு3 வருகின்றது. பாலையாகலின், இருவகைப் பிரிவும் பாலைக்குரிய பொருளாயின. (13) |
1. தோன்றினும்-பாடம். |
1. நிலை பெறத்தோன்றினும் என்பதன் உம்மை. |
2. பிரிதற்குறிப்பு-பிரிவுண்டு என்று கொள்ளுமாறு தலைவனிடம் நிகழும் பாராட்டுதல் முதலிய செயல்களாம். |
3. முன்னிரு சூத்திரங்களில் தொடர்பாகச் சொல்லப்பட்டு |