நச்சினார்க்கினியர் (12) |
13. இருவகைப்பிரிவு. . . . . .புலவர். |
இது பாலைப்பகுதி இரண்டெனவும் அவ்விரண்டற்கும் பின்பனி உரித்தெனவுங் கூறுகின்றது. |
இதன் பொருள் :-இருவகைப் பிரிவும் நிலைபெறத்தோன்றினும் - நான்கு வருணத்தார்க்குங் காலிற் பிரிவும் வேளாளர்க்குக் கலத்திற் பிரிவும் தத்தம் நிலைமைக்கேற்பத் தோன்றினும், உரியது ஆகும் என்மனார் புலவர்-பின்பனிக்காலம் அவ்விரண்டற்கும் உரிமை பூண்டு நிற்குமென்று கூறுவர் புலவர் என்றவாறு |
கடலினை நிலமென்னாமையிற் கலத்திற்கு பிரிவுமுன் பகுத்த நிலத்துள் அடங்காதென்று அதுவும் அடங்குதற்கு இருவகைப் பிரிவும் என்னும் முற்றும்மை கொடுத்துக்காலிற் பிரிவோடு கூட்டிக் கூறினார். கலத்திற் பிரிவு அந்தணர் முதலிய செந்தீவாழ் நர்க்கு ஆகாமையின் வேளாளர்க்கே |
வருவது. அதிகாரம்-தொடர்பு. |
உரித்தென்றார். வேதவணிகரல்லாதர்1 கலத்திற்கு பிரிவு வேதநெறி யன்மையின் ஆராய்ச்சியின்று இக்கருத்தானே இருவகை வேனிலும் நண்பகலும் இருவகைப் பிரிவிற்கு ஒப்ப உரியவன்றிக் காலிற் பிரிவுக்குச் சிறத்தலும், கலத்திற் பிரிவுக்குச் இளவேனி லொன்றுங் காற்றுமிகாத முற்பக்கத்துச் சிறு வரவிற்றாய் வருதலும் கொள்க. ஒழிந்த உரிப்பொருள்களிலும் பாலை இடை நிகழு மென்றலிற்2 பிரிய வேண்டியவழி அவற்றிற்கு ஓதிய காலங்கள் கலத்திற் பிரிவிற்கும் வந்தால் இழுக்கின்று. என்னை? கார்காலத்துக் கலத்திற்பிரிவும் உலகியலாய்ப் பாடலுட் பயின்று வருமாயினென்க. தோன்றினும் என்ற உம்மை சிறப்பும்மை. இரண்டு பிரிவிற்கும் பின்பனி உரிதென்றலின். |
1. பேத நெறி யொழுகாத வணிகர்-வேற்வி முதலிய செய்தொழுகாதவர் |
2. சூத்திரம் 2-ல் இவர் எழுதியுள்ளார்; காண்க. |