இனிக் கலத்திற் பிரிவிற்கு |
உதாரணம் :- |
“உலகுகிளர்ந் தன்ன வுருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கட னீரிடை போழ விரவு மெல்லையு மசைவின் றாதி விரைசெல லியற்கை வங்கூ ழாட்டக் கோடுயர் திணிமண லகன்றுறை நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய வான்வினைப் புரிந்த காதலர் நாள்பல கழியா பையே யழிபட ரகல வருவர் மன்னாற் றோழி தண்பனைப் பொருபுனல் வைப்பி னம்மூ ராங்கட் கருவிளை முரணிய தண்புதற் பகன்றைப் பெருவன மலர வல்லி தீண்டிப் பலவுக்காய்ப் புறத்த பசும் பழப் பாகல் கூதள மூதிலைக் கொடிநிரை தூங்க வறனின் றலைக்கு மானா வாடை கடிமனை மாடத்துக் கங்குல் வீசத்3 திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாஅய் நிரைவளை யூருந் தோளென வுரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே.” |
(அகம்-255) |
இது தோழி தூதுவிடுவது காரணமாக உரைத்தது.4 |
இம் மணிமிடை பவளத்துப் பின்பனி வந்தவாறும் நண்பகல் கூறாமையும் அவர் குறித்தகாலம் இதுவென்பது தோன்றியவாறுங் காண்க. |
3. அறனின் றலைக்கும் ஆனா வாடை கடிமனை யகத்துக் கங்குல்வீச என்பது பின்பனிக்குரிய பகுதி. |
4. தன் ஆற்றாமை யறிந்துதோழி தலைவனிடம் தூது விடல் வேண்டும் என்னும் நினைவால் தலைவி கூறியது உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறின் வருவர் என்றது தூதுவிட விரும்பும் குறிப்பு |