பக்கம் எண் :

92தொல்காப்பியம் - உரைவளம்

“குன்ற வெண்மண லேறி நின்றுநின்
றின்னுங் காண்கம் வம்மோ தோழி
களிறுங் கந்தும் போல நளிகடற்
கூம்புங் கலனுந் தோன்றுந்
தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே.”

  

வருகின்றாரெனக் கேட்ட தலைவி தோழிக்கு உரைத்தது இது பின்பனி நின்ற காலம்5 வரைவின்றி வந்தது.
  

கடலிடைக்     கலத்தைச்  செலுத்துதற்கு உரிய காற்றொரு பட்ட காலம் யாதானுங்6 கொள்க. ‘ஆகும்’
என்றதனால்  வேத  வணிகரும்  பொருளின்றி   இல்லறம்   நிகழாத  காலத்தாயிற்  செந்நீ  வழிபடுதற்கு
உரியோரை நாட்டிக் கலத்திற் பிரிதற்கு உரியரென்று கொள்க.
  

13. இருவகைப் . . . . . . புலவர்
  

பாரதியார்
  

கருத்து :-  இது  முதிர்வேனிலிற்  பிரிந்தார்  கார் காலத்து  மீண்டு  வந்து  கூடலும்,  பின்பனிக்காலம்
பிரிந்தார் இளவேனிலில் கூடலும், மரபென்பதை விளக்குகிறது.
  

  

பொருள் :- இருவகைப்  பிரிவு  -  முன்னையிரு  சூத்திரங்களிலும்   கூறப்பெற்ற  வேனிற்  பிரிவும்,
பின்பனிப்பிரிவும்;   நிலைபெறத்   தோன்றினும்-பிரிதல்  நிமித்தங்களாக   அமையாது,   பிரிந்து  நின்ற
பாலையாகவே  உருப்படினும்;  உரியதாகும்   என்மனார்  புலவர்-அது   பாலைக்குரியதேயாகும்  என்று
கூறுவர் புலவர்.
  

குறிப்பு :- இதில் இருவகைப்  பிரிவென்பதற்கு  உரையாசிரிய ரிருவரும் இரு வேறுரைகள் தருவாராவர்.
தொல்காப்பியர்  தம்  இலக்கண  நூலில்  யாண்டும்   தாம்   நுதலும்   பொருளை  ஐயமற  வரையறுத்து
விளக்குவதைக் கடனாகக் கொண்


5. பின்பனி நீங்கிய காலம்
  

6. இளவேனிலாவது முதுவேனிலாவது