துளி மிகுதலிற் சேறல் அரிதாதலானும், பானாட் கங்குலிற்பரந்துடன் வழங்காது மாவும் புள்ளுந்துணையுடன் இன்புற்றுவதிதலிற் காமக் குறிப்புக் கழியப்பெருகுதலானும் காதன்மிகுதி நோக்காது வருந்தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டும் புணருங்கால் இன்பம் பெருகுதலின், இந்நிலத்திற்குக் கூதிர்க்காலஞ் சிறந்ததெனப்படும். |