பக்கம் எண் :

94தொல்காப்பியம் - உரைவளம்

இதற்கு     முன்  தனியிரண்டு    சூத்திரங்களில்   ஆசிரியர்   விளக்கினாராகலானும்,   இச்சூத்திரத்தில்
அவற்றையே இருவகைப் பிரிவுமெனத் தொகுத்துக்கூறி நிறுத்தினர் எனக்கொள்ளுதலே பொருத்தமாகும்.
  

1.  வேனிற்பிரிவுக்குச்  செய்யுள்மேலே  “நடுவுநிலைத்  திணையே”  எனும் 9-ஆம் சூத்திரத்தின் கீழ்க்
காட்டிய “உறைதுறந்திருந்த” எனவரும் நற்றிணைப்பாட்டாலறிக.
  

இன்னும் பின்வரும் காவன்முல்லைப் பூதனார் பாட்டும் முதிர்வேனிற் பிரிவு கூறுதல் காண்க.
  

“அஞ்சி லோதி ஆள்வளை நெகிழ
நேர்ந்துதம் அருளார், நீத்தோர்க் கஞ்சல்
எஞ்சினம் வாழி, தோழி! எஞ்சாத்
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை
வேனிலோரிணர் தேனோ டூதி
ஆராது பெயரும் தும்பி
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே”

(குறுந்-211)
  

இதில்,    “தீய்ந்த மராமரத்தின் ஓங்கிய கிளையில் உண்டான ஒரே பூங்கொத்திலும் கூடத்தேன் எனும்
பேண்வண்டோடு  தும்பி  எனுமாண்வண்டு  ஊதி  அளைந்து  தேடியும்  வண்ணத்தேனின்றி  மீளும்”
எனலாலும்,  நீரின்மை  சுட்டுதலாலும்,  பருவம்  முதிர்வேனிலாதல்  வெளிப்படை.  அதில் தலைவன்,
தலைவியை அருளாதகன்று சுரனிறத்தலால் அவ்வேனில் பிரிவுப்பருவ மாதலறிக.
  

2. இனி, வேனிற்பிரிந்தார் காரிற் கூடுதல் கீழ்வருஞ் செய்யுளிற் காண்க.
  

“விருந்தெவன் செய்கோ? தோழி சாரல்
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பிமி ரடுக்கம் புலம்பக் களிறட்
டுரும்பி லுள்ளத் தரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் வரவறிந்து திரும்பி
மாக்கடல் முகந்து மணிநிறந் தருவித்