தாழ்நீர் ரனந்தலை யழுந்துபடப் பாஅய் மலையிமைப் பதுபோல் மின்னிச் சிலைவல் வேற்றெடு செறிந்தவிம் மழைக்கே.” |
(நற்-112) |
இன்னும் “இலையில் பிடவம் ஈர்ம் மலரரும்ப” எனும் பெருங்கண்ணனார் நற்றிணைப் பாட்டிலும் இத்துறை வருதலறிக. |
“கார் தொடங் கின்றே காலை; வல்விரைந்து செல்க, பாக! நின் தேரே உவக்காண் கழிப்பெயர் களரிற் போகிய மடமான் விழிக்கட் பேதையொ டினனிரிந் தோடக் காமர் நெஞ்சமொ டகலாத் தேடூஉ நின்ற இரலை யேறே.” |
(நற்-242) |
இன்னும், |
“உலகிற் காணி யாகப் பலர்தொழப் பலவயி னிலைஇய குன்றிற் கோடுதோ றேயினை உரைஇய ரோ பெருங்கலி எழிலி! படுமலை நின்ற நல்யாழ் வடிநரம் பெழீஇ யன்ன உறையினை; முழவின் மண்ணார் கண்ணி னிம்மென இமிரும் வணர்ந்தொலி கூந்தன் மாஅ யோளொடு புணர்ந்தினிது நுகர்ந்த சாரல் நல்லூர் விரவு மலருதிர வீசி இரவுப்பெயல் பொழிந்த உதவி யோயே.” |
(நற்-139) |
எனும் பெருங் கௌசிகனார் பாட்டும் முதுவேனிற் பிரிந்தார் காரிற் கூடியின் புறலை விளக்கும் பரிசு களித்தற்குரியது. |
3. இனி, பின்பனி பிரிவுக்குப் பாட்டு:- |
“அம்ம வாழி தோழி! காதலர் நூலறு முத்திற் றண்சித ருறைப்பத் தாளித் தண்பவர் நாளா மேயும் பனிபடு நாளே பிரிந்தனர் பிரியும் நாளும் பலவா குவவே.” |
(குறுந்-104) |