பக்கம் எண் :

96தொல்காப்பியம் - உரைவளம்

“அம்ம வாழி தோழி! முன்னின்று
பனிக்கடுங் குரையம் செல்லா தீமெனச்
சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே.”

(குறுந்-350)
  

4. பின்பனியிற் பிரிவார் இளவேனில் கூடுவதற்குச் செய்யுள்:-
  

“..............................................
ஆற்றறல் நுணங்கிய நாட்பத வேனி
லிணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும்
நல்வயி னினையும் நெஞ்சமொடு கைமிகக்
கேட்டொறுங் கலுமுமால் பெரிதே
................................................................
துண்பஃ றித்தி மாஅ யோளே.”

(நற்-157)
  

இன்னும்
  

“அன்பினர், மன்னும் பெரியர்.................
............................................................................
செங்க ணிருங்குயில் எதிர்குரல் பயிற்றும்
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயிற்
பிரியல மென்று தெளித்தோர் தேஎத்
தினியெவன் மொழிகோ யானே.............
வெம்முனை அருஞ்சுர முன்னி யோர்க்கே.”

(நற்-224)
  

எனவருமிப்   பெருங்   கடுங்கோ  பாட்டும்,  “ஈங்கே  வருவர்;  இனையல்”  என்னும்  கச்சிப்பேட்டு
நன்னாகையார் குறும்பாட்டும். இத்துறையையே விளக்குதல் காண்க.                               (11)
  

சிவலிங்கனார்
  

இச்சூத்திரம் களவுப் பிரிவும் கற்புப் பிரிவும் பாலை எனப்படும் என்கிறது.
  

(இ-ள்)  களவில்  நிகழும்  பிரிவும் கற்பில் நிகழும் பிரிவும் ஆகிய இருவகைப் பிரிவுகளும் செய்யுளில்
நிலைபெறுமாறு தோன்றினும் அவைகள் பாலைத் திணைக்கு உரியவாகும் என்றவாறு.