பக்கம் எண் :

98தொல்காப்பியம் - உரைவளம்

ஆம்.  அவ்வாறு  கூறியதால்  தான்   அடுத்துத்   திணைமயக்குறுதலும்”  (  )  என்றும்   கூறநேர்ந்தது
என்னலாம். எனினும் இவ்வுரை அத்துணைச்சிறப்பின்று.
  

14. 

திணைமயக்  குறுதலும்  கடிநிலை  இலவே  நிலன் 
ஒருங்கு  மயங்குதல்  இல  என  மொழிப புலன்நன்கு
உணர்ந்த புலமை யோரே
14
 

ஆ.மொ.இல.
  

The intermingling of ‘thinai’ is not
prevented The intermingling of
regions is not allowed-
Poets well-versed in literature say so.
  

பி.இ.நூ.
  

நம்பி 251
  

முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய

  

இல.வி.அ.22. -  -
  

இளம்பூரணர்
  

திணைமயக்குறுதலும்.................யோரே.
  

இது,   மேல்   அதிகரிக்கப்பட்ட   நிலத்தினானும்   காலத்தினானும்   ஆகிய   திணை  மயங்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)   திணை1  மயங்குறுதலும்  கடிநிலை இல - ஒரு  திணைக்கு  உரிய  முதற்பொருள்  மற்றோர்
திணைக்குரிய   முதற்பொருளோடு  சேர  நிற்றலும்   கடியப்படாது,   நிலன்   ஒருங்கு  மயங்குதல்  இல்
எனமொழிப-ஆண்டு   நிலன்   சேரநிற்றல்   இல்லை  என்று   சொல்லுவர்,   புலன்   நன்கு  உணர்ந்த
புலமையோர்-புலன் நன்கு உணர்ந்த புலமையோர்.


1. திணை-முதற்பொருள்.