xvi | எல்லாக் குலத்தும், பெண்கள் மடலேறுதல் என்பது கிடையாது (38) ஆனால் பிற்காலத்தில் பெண் மடலேறியமை அறிய முடிகின்றது. | கைக்கிளை என்பது புணராது நிகழும் ஒழுக்கமாகும் பெருந்திணை என்பது புணர்ந்த பின் நிகழும் ஒழுக்கமாகும். | பிறருக்குக் குற்றேவல் செய்பவரும் பிறர் ஏவிய தொழிலைச் செய்பவரும் ஆகிய இவ்விரு பிரிவினரையும் அன்பின் ஐந்திணையிலிருந்து நீக்கும் நிலைமையில்லை. ஆனால், அப்பிரிவுகளைக் கைக்கிளை, பெருந்திணையின் கண் சேர்ப்பர் (25, 26). | பா அமைப்பு | உலகவழக்கிலும் புனைந்துரை வகையிலும் அப்பாடல்களை அமைப்பதற்குக் கலியும் பரிபாடலும் என்ற இரண்டு செய்யுள் வகைகள் உரியதாகும் (56). | உவமை | புலவர்கள் தாம் கொண்ட கருத்தைப் புலப்படுத்தப் பயன்படுத்துகின்ற ஒரு உத்தி, உவமை. தொல்காப்பியம், அகத்திணைப் பாடல்களில் வரும் உவமையை இரண்டு வகையாகப் பகுத்துக் கூறுகின்றது. அவை உள்ளுறை உவமம், ஏனை உவமம் என்பனவாம் (49). உள்ளுறை உவமம் என்பது வெளிப்படக் கூறும் பொருளோடு, உள்ளும் பொருளும் ஒத்து முடியுமாறு; உள்ளத்தின் ஊன்றி நுணுகி உணர அமைந்து முடிவது உள்ளுறை உவமமாகும் (51). | அவ்வாறு அமையும் உள்ளுறை உவமம் தெய்வம் ஒழிந்த உணவு, மா, மரம், புள், பறை, செய்தி, யாழ், மற்றும் பல கருப்பொருட்களை இடமாகக் கொண்டு அமையும் என்பர் இலக்கணிகள் (50). | ஏனை உவமம் எனப்படுகின்ற உள்ளுறை உவமம் ஒழிந்த உவமங்கள் வாசகர் பொருளை நுணுகி ஆராயாமல் தானே வெளிப்படையாக உணரும் பொருளையுடையதாக அமையும் (52). அவ்வமயம் வண்ணம், வடிவு, பயன், தொழில் என்ற பாங்கில் அமைந்திருக்கும். |
|
|