நச்சினார்க்கினியர் (14) |
14. திணைமயக்.......................யோரே. |
இஃது உரிப்பொருள் மயங்கு மென்றலின் மேலன1 வற்றிற்குப் புறனடை. |
இதன் பொருள் :- திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே - ‘மாயோன்மேய’ (5) என்பதனுள் ஒரு நிலத்து ஒரொழுக்கம் நிகழுமென நிரனிறுத்துக் கூறிய ஒழுக்கம் அவ்வந் நிலத்திற்கே உரித்தா யொழுகாது தம்முள் மயங்கி வருதலும் நீக்கப்படா, நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என மொழிப - அங்ஙனம் ஒரு நிலத்து இரண்டொழுக்கந் தம்முள் மயங்குதலன்றி இரண்டு நிலம் ஓரொவொழுக்கத்தின்கண், புலன் நன்கு உணர்ந்த புலமையோர் - அங்ஙனம் நிலனும் ஒழுக்கமும் இயைபுபடுத்துச் செய்யும் புலனெறி வழக்கினை நன்று உணர்ந்த அறிவினையுடையோர் என்றவாறு. |
என்றது ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள் மயங்கிவரு மென்பதூஉம், நிலன்இரண்டு மயங்காதெனவே காலம் இரண்டு தம்முள் மயங்குமென்பதூஉம், கூறினாராயிற்று. எனவே, ஒரு நிலமே மயங்கு மாறாயிற்று. உரிப்பொருண் மயக்குறுதல் என்னாது திணைமயக்குறுதலும் என்றார், ஓர் உரிப்பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும். இவ்வாறே2 காலம் மயங்குதலும்-கருப்பொருண் மயங்குதலும்பெறு மென்றற்கு. திணையென்றது அம்மூன்றனையுங்3 கொண்டே நிற்றலின், |
உதாரணம் :-
|
1. முதல் கருஉரிப் பொருள்களுக்கு. |
2. ஓர் காலத்தோடு பிறிதோர் காலம் வந்து மயங்குதலும் ஓர் காலம் நிற்றற்குரிய விடத்துப்பிறிதோர் காலம் வந்து நிற்றலும் ஓர் நிலக்கருப்பொருளோடு பிறிதோர் நிலக்கருப் பொருள்வந்து மயங்குதலும் ஓரநிலக்கருப்பொருள் நிற்றற்குரிய விடத்துப் பிறிதோர் கருப்பொருள் வந்து நிற்றலும் கொள்க. |
3. அம் மூன்று-முதல் கரு உரிப்பொருள். |