“அறியே மல்லே மறிந்தன மாதோ பொரிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் சாந்த நாறு நறியோள் கூந்த னாறுதின் மார்பே தெய்யோ.” |
(ஐங்குறு-240) |
இது புறத்தொழுக்க மின்றென்றாற்குத் தோழி கூறியது4 |
“புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை வளைவெண் மருப்பிற் கேழல் புரக்குங் குன்றுகெழு நாடன் மன்றதன் பொன்போற் புதல்வனோ டென்னீத் தோனே” |
(ஐங்குறு-265) |
இது வாயில்களுக்குத் தலைவி கூறியது5 |
“வன்கட் கானவன் மென்சொன் மடமகள் புன்புல மயக்கத் துழுத வேனற் பைம்புறச் சிறுகிளி கடியு நாட பெரிய கூறி நீப்பினும் பொய் வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே.” |
(ஐங்குறு-283) |
இது தலைவன் ஆற்றாமை வாயிலாகப் புணர்ந்துழிப்பள்ளியிடத்துச் சென்ற தோழி கூறியது6 |
4. பரத்தையிற் பிரிவு ஒரு ரகத்தது. இதில் சாந்தம் நாறும் நறியோள் என்றதால் பரத்தை சாந்தமரம் உள்ள குறிஞ்சி நிலத்தாள் என்பது புலப்படும் அவள் கூந்தல் மணம் நின்மார் பிடத்து நாறும் என்றமையால் வாயில் மறுத்தலாகிய ஊடல் ஒழுக்கம்புலப்படும். எனவே குறிஞ்சியில் மருதம் நிகழ்ந்ததாம். |
5. குன்று கெழு நாடன் என்றதால் குறிஞ்சியும் புதல்வனொடு என்னையும் நீத்துப்புறந்து ஒழுகினான் என்று வாயில்களிடம்கூறி மறுப்பதால் மருதமும் காண்க. |
6. ஏனல் பைம்புறச்சிறு கிளி கடியும் நாடன் என்றதால் குறிஞ்சி நிலமும் பெரியகூறி.....பலவே என்றதால் ஊடற்குறிப்பும் காண்க. |