பக்கம் எண் :

102தொல்காப்பியம் - உரைவளம்

இவை  குறிஞ்சிக்கண்  மருதம்  நிகழ்ந்தன; இவை ஓரொழுக்கம் நிகழ்தற்கு உரியவிடத்தே ஓரொழுக்கம்
நிகழ்ந்தன7
  

“அன்னாய் வாழிவேன் டன்னையென் றோழி
பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை
கொன்னே கடவுதி யாயி னென்னதூஉ
மறிய வாகுமோ மற்றே
முறியினர்க் கோங்கம் பயந்த மாறே.”

(ஐங்குறு-366)
  

இஃது இவ்வேறுபாடென்னென்ற செவிலிக்குத் தோழிபூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்.
  

இது பாலையிற் குறிஞ்சி8
  

இஃது    உரிப்பொருளோடு    உரிப்பொருள்   மயங்கிற்று9   மேல்   வருவனவற்றிற்கும்   இவ்வாறு
உய்த்துணர்ந்து கொள்க.
  

“வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழின்
முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருநற்
குறிநீ செய்தனை யென்ப வலரே
குரவ நீள்சினை யுறையும்
பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே.”

(ஐங்குறு-369)


7. நிலத்தால்  குறிஞ்சி  ஒழுக்கத்தால் ஊடலும் வந்தன. இடம் நிலம்-முதற்பொருள், குறிஞ்சி நிலத்தில்
மருத ஒழுக்கம் நிகழ்ந்தது திணைமயக்கம்.
  

8. கோங்கம்    பாலைக்கருப்பொருள்.    அதனால்     இப்பாடல்    பாலைத்    திணைக்குரியதாம்.
கோங்கம்பூத்தந்து புணர்ந்தான்  எனக்குறிப்பிற்   கூறி  அறத்தொடு  நிற்றலால்  குறிஞ்சி  ஒழுக்கம்
கூறப்பட்டது.
  

9. இத்தொடர்தவறு.