பக்கம் எண் :

திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே சூ.14103

இது   பொழிலிடத்து   ஒருத்தியொடு  தங்கிவந்தும்  யான்  பரத்தையை  அறியேனென்றாற்கு  தோழி
கூறியது.10
  

“வண்சினைக் கோங்கின் றண் கமழ் படலை
யிருஞ் சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப
நீநயந் துறையப் பட்டோள்
யார ளோவெம் மறையா தீமே.”

(ஐங்குறு-370)
 
  

இது பரத்தையர்க்குப் பூவணிந்தமை கேட்ட தலைவி அஃதின் றென்றாற்குக் கூறியது.11
  

இவை பாலைக்கண் மருதம் நிகழ்ந்தன.
  

‘அருந்தவ மாற்றியார்12, என்னும் பாலைக்கலியும் அது.
  

“அன்னை வாழிவேண் டன்னை யுதுக்கா
ணேர்கொடிப் பாசடும்பு பரிய வூர்பிழிபு
நெய்தன் மயக்கிவந் தன்று நின்மகள்
பூப்போ லுண்கண் மரீஇய
நோய்க்கு மருந் தாகிய கொண்கன் றேரே”

(ஐங்குறு-101)
  

இஃது  அறத்தொடு  நின்றபின்  வரைதற்குப்  பிரிந்தான்  வரைவொடு  வந்தமை  தோழி செவிலிக்குக்
காட்டியது.


10. குரவ  நீள்சினையுறையும்  பருவம்  என்றதால்  குரவுக்கருப்   பொருளாலும்  குரவமலர்க்கிளையில்
குயில்வதியும் பருவம்  என்பதால்  இளவேனிற்  பருவம் கூறப்பட்டன. அதனால் பாலை நிலமாயிற்று.
நீநெருதல்   ஒருத்தியொரு  குறி  செய்தனை  என்று  அவர் கூறுவர்  என்றதால் ஊடல்  ஒழுக்கம்
கூறப்பட்டது.
  

11. கோங்கு  கூறியதால்  பாலைநிலமும் நீநயந்துறையப் பட்டாள் யார்? மறையாது கூறுமின் என்றதால்
ஊடலும் பெறப்படும்.
  

12. பாலைக்கலி 20.