பக்கம் எண் :

104தொல்காப்பியம் - உரைவளம்

இது நெய்தலிற் குறிஞ்சி.
  

“கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே.”

(ஐங்குறு-122)
  

“கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
வுண்ணாப் பாவை யூட்டு வோளே.”

(ஐங்குறு-128)
  

இவை  பெதும்மைப்  பருவத்தாள்  ஒரு  தலைவியொடு  வேட்கை  நிகழ்ந்தமையைத்  தலைவி கூறித்
தலைவன் குறிப் புணர்ந்தது.
  

இப்பத்தும் நெய்தற்கண் மருதம்
  

“யானெவன் செய்கோ பாண வனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனவென் புரிவளைத் தோளே.”

(ஐங்குறு-133)
  

இது தலைவன் புறத்துப்போன அத்துணைக்கு ஆற்றாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது.
  

இப்பத்தும் நெற்கற்கண் மருதம்.
  

“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப நக்க கண்போ னெய்தல்
கட்கமழ்ந் தானாத் துறைவற்கு
நெக்க நெஞ்ச நேர்கல் லேனே.”

(ஐங்குறு 151)
  

இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயின் மறுத்தது.
  

இப்பத்தும் நெய்தற்கண் மருதம்.
  

“இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி
முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றோளே