பக்கம் எண் :

திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே சூ.14105

புலம்புகொள் மாலை மறைய
நலங்கே ழாக நல்குவ ளெனக்கே.”

(ஐங்குறு-197)
  

இது இடந்தலைப்பாட்டிற் றலைவி நிலைகண்டு கூறியது. இது நெய்தலிற் புணர்தனிமித்தம்.
  

“வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன்
றண்ணக மண்ணளை நிறைய நெல்லி
னிரும்பூ வுறைக்கு மூரற்கிவள்
பெருங்கவி னிழப்ப தெவன்கொ லன்னாய்.”

(ஐங்குறு 30)
  

இது தோழி அறத்தொடு நின்றது.
  

“பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவுங்
கழனி யூரநின் மொழிவ லென்றுந்
துஞ்சுமனை நெடுநகர் வருதி
யஞ்சா யோவிவ டந்தகை வேலே.”

(ஐங்குறு 60)
  

இதுதோழி இரவுக்குறிமறுத்தது.
  

“நெறிமருப் பெருமை நீல விரும்போத்து
வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங்
கழனி யூரன் மகளிவள்
பழன வெதிரின் கொடிப்பினை யலளே.”

(ஐங்குறு-91)
  

இஃது இளையள் விளைவில ளென்றது.1
  

“கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக்
காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு
நுந்தை நும்முர் வருது
மொண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே.”
2

(ஐங்குறு-92)


1. பொய்கை  ஆம்பலை  எருமைப்  போத்து  மயக்கும்  என்றது  மருதம்.  பழன  வேதிதின் (கரும்பு)
மாலை  அணிந்தவள்  என்றது இளையள் புணர்ச்சிக்குரிய விளைவு இவள் என்றது சேட்படையாதலின்
குறிஞ்சி.
  

2. எருமைப்  புனிற்றா   கிழவிக்கு  முலை  மடுக்கும்  என்றது  நின்னையாம் பெறின் வருதும் என்றது
குறிஞ்சி.