இனிக் காலம் ஒருங்கு மயங்குங்காற் பெரும்பொழுது இரண்டும் பெரும்பான்மையுஞ் சிறுபொழுதும் மயங்குதலுங் கொள்க. |
“மழையில் வான மீனணிந் தன்ன குழையமன் முசுண்டை வாலிய மலர வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் பெரிய சூடிய கவர்கோற் கோவல ரெல்லுப் பெயலுழந்த பல்லா நிரையொடு நீர்திகழ் கண்ணிய ரூர்வயிற் பெயர்தர நனிசேட் பட்ட மாரி தளிசிறந் தேர்தரு கடுநீர் தெருவதோ றேழுகப் பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக் கூதிர்நின் றன்றாற் பொழுதே காதலர் நந்நிலை யறியா ராயினுந் தந்நிலை யறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக் காய்சின யானைக் கங்குற் சூழ வஞ்சுவர விறுத்த தானை வெஞ்சின வேந்தன் பாசறை யோரே.” |
(அகம்-264) |
இது தோழிக்குத் தலைவி கூறியது. |
இம் மணிமிடை பவளத்துள் முல்லையுட் கூதிர் வந்தது4 |
“மங்குன் மாமழை விண்ணதிர்பு முழங்கித் துள்ளுப்பெயல் கழிந்த பின்னறைப் புகையுறப் புள்ளிநுண் டுவலை பூவக நிறையக் காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் நீர்வார் கண்ணிற் கருவிளை மலரத் துய்த்தலைப் பூவின் புதலிவ ரீங்கை நெய்த்தோய்த் தன்ன நீர்நனை யந்தளி ரிருவகி ரீருளி ணீரிய துயல்வர வவரைப் பைம்பூப் பயில வகல்வயற் கதிர்வார் காய்றெற் கட்கினி திறைஞ்சச் சிதர்சினைத் தூங்கி மற்சிர வரைநாட் |
4. கோவலர் ஊர்வயிற் பெயர்தர முதலியன முல்லை கூதிர்நின்றன்றாற் பொழுது என்பது கூதிர்க்காலம். |